Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது!

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 3:49 PM

இலங்கையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, சமகால அடிமைத்தனம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விசேட தலையீட்டாளரான டொமோயா ஒபொகட்டா 2021 நவம்பர் 26லிருந்து டிசம்பர் 03ம் திகதி வரை தனது முதலாவது இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
  • இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட முறையான வேலை வாய்ப்பில் நுழைவதற்கு தடையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பலவீனங்கள் மற்றும் முறையான தடைகளை மதிப்பிடுவதற்கு சிறப்பு பிரதிநிதி உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
  • இந்நாட்டிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் அவர் 2022 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் 51வது கூட்டத் தொடரில் தனது இலங்கை விஜயம் குறித்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
எழுத்து அளவு:

இதன்படி, சமகால அடிமைத்தனம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விசேட தலையீட்டாளரான டொமோயா ஒபொகட்டா 2021 நவம்பர் 26லிருந்து டிசம்பர் 03ம் திகதி வரை தனது முதலாவது இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த விசேட பிரதிநிதி இந்நாட்டு தைத்த ஆடைத் தொழிற்துறை, தேயிலைத் தோட்டத் தொழிற்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வீட்டுப் பணி போன்ற துறைகளில் உழைப்பு நிலைமைகளை ஆய்வு செய்யவுள்ளார்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட முறையான வேலை வாய்ப்பில் நுழைவதற்கு தடையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பலவீனங்கள் மற்றும் முறையான தடைகளை மதிப்பிடுவதற்கு சிறப்பு பிரதிநிதி உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ‘நிலையான அபிவிருத்தி இலக்குகளின் 8.7 அடைவதற்காக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செய்துள்ள ‘அர்ப்பணிப்புகளை” கருத்தில் கொண்டு இந்த விடயத்தில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, குறைபாடுகள் எவை என்பதையும், அவற்றிற்கு தீர்வுகாண எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் மதிப்பீடு செய்வதில் ஆர்வத்துடன் இருப்பதாக ஐ.நா.மன்றத்தின் விசேட பிரதிநிதி ஒபோகாட்டா கூறுகிறார்.

கட்டாய உழைப்பை ஒழிப்பதற்கும், நவீன அடிமைத்தனம் மற்றும் மனித வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சிறுவர் படையினரை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பயன்படுத்தல் போன்றவறை ஒழிப்பதற்கும் மற்றும் 2025 நிறைவுறும் போது இந்நாட்டிலிருந்து சிறுவர் உழைப்புச் சுரண்டலை தடுப்பதற்கும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரச தலையீடு தேவைப்படுமெனவும் விசேட பிரதிநிதி அறிவித்துள்ளார்.

இந்நாட்டிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் அவர் 2022 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் 51வது கூட்டத் தொடரில் தனது இலங்கை விஜயம் குறித்து அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...