Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

படகு பாலம் கவிழ்ந்து உயிரிழந்த பிள்ளைகளுக்கு முல்லைத்தீவு மாணவர்கள் அஞ்சலி!

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 9:03 AM

படகு பாலம் கவிழ்ந்து உயிரிழந்த பிள்ளைகளுக்கு முல்லைத்தீவு மாணவர்கள் அஞ்சலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருகோணமலையில் படகு பாதை கவிழ்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவர்களுக்காக முல்லைத்தீவில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளனர்.
  • திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாகேணி களப்பில் செவ்வாய்க்கிழமை காலை படகு பாதை கவிழ்ந்து உயிரிழந்த மாணவர்களின் நினைவாக முல்லைத்தீவு குளமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நேற்று (24) காலை இறுதி அஞ்சலி செலுத்தியதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • புதிய களனி பாலத்திற்கு 'கோல்டன் கேட் கல்யாணி' என பெயரிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
  • இந்தப் பாலமானது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்குச் சென்று அங்கிருந்து ஒருகொடவத்தை, இகுருகடே சந்தி மற்றும் துறைமுக அணுகல் வீதிக்கு செல்லும் 6 வழிப்பாலமாகும்.
எழுத்து அளவு:

திருகோணமலையில் படகு பாதை கவிழ்ந்து உயிரிழந்த பாடசாலை மாணவர்களுக்காக முல்லைத்தீவில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாகேணி களப்பில் செவ்வாய்க்கிழமை காலை படகு பாதை கவிழ்ந்து உயிரிழந்த  மாணவர்களின் நினைவாக முல்லைத்தீவு குளமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நேற்று (24) காலை இறுதி அஞ்சலி செலுத்தியதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி  மலரஞ்சலி செலுத்துவதற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிழ்ந்த படகு பாதையில் நடத்துனர்கள் மற்றும் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

IMG 20211124 WA0047FB IMG 1637745727018

"கல்யாணி தங்க நுழைவாயில்"

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்ப கேபிள் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனி பாலத்தை நேற்று திறந்து வைத்தனர்.

புதிய களனி பாலத்திற்கு 'கோல்டன் கேட் கல்யாணி' என பெயரிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து பேலியகொட பாலம் சந்தி வரை ஆரம்பிக்கப்படும் புதிய களனி பாலம் திட்டம் ஒருகொடவத்தை சந்தி மற்றும் துறைமுக அணுகல் சந்தியில் நிறைவடையும்.

இந்தப் பாலமானது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் முடிவில் இருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்குச் சென்று அங்கிருந்து ஒருகொடவத்தை, இகுருகடே சந்தி மற்றும் துறைமுக அணுகல் வீதிக்கு செல்லும் 6 வழிப்பாலமாகும்.

களனி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் நீளம் 380 மீற்றர்களாகும். இந்த பாலம் இரண்டு கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) நிதியளித்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...