Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

"நான் சரி இல்லை என்றால்", எதிர்க்கட்சியா மாற்று?' ஜனாதிபதி கேட்கிறார்

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 4:36 AM

"நான் சரி இல்லை என்றால்", எதிர்க்கட்சியா மாற்று?' ஜனாதிபதி கேட்கிறார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “நான் சரி இல்லை என்றால், எமது ஆட்சி சரியில்லை என்றால், மாற்று எதிர்க்கட்சியா என்று மக்களிடம் கேட்கிறோம்.
  • தெற்காசியாவின் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தில் தலைசிறந்த கட்டுமானமாக கருதப்படும் கோல்டன் கேட் கல்யாணி திறப்பு விழாவில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
  • அரசாங்கத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை (2/3) இருப்பதாகவும், எனவே கோரிக்கைகளை முன்வைக்கும் போது எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
எழுத்து அளவு:

“நான் சரி இல்லை என்றால், எமது ஆட்சி சரியில்லை என்றால், மாற்று எதிர்க்கட்சியா என்று மக்களிடம் கேட்கிறோம். ஐந்தாண்டுகள் எப்படி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று பார்த்தோம். சிறுபான்மையினரின் வாக்குகளை கோத்தபாய ராஜபக்ச பெறாத காரணத்தினால் வெற்றிபெற முடியாது என அப்போது கூறப்பட்டது. நாங்கள் வெற்றி பெற்றோம்  இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை விட மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை இம்முறை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளால் நான் வெற்றி பெற்றேன், அந்தக் குழுவின் தோல்வி, பலவீனமான அரசாங்கம் மற்றும் அவர்களின் பழிவாங்கலை வெறுத்த மக்களால் நாங்கள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றோம், ”என்று ஜனாதிபதி கூறினார்.

தெற்காசியாவின் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தில் தலைசிறந்த கட்டுமானமாக கருதப்படும் கோல்டன் கேட் கல்யாணி  திறப்பு விழாவில் நேற்று (24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

எச்சரிக்கை: கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருங்கள்!

கோரிக்கைகளை முன்வைக்கும் போது கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்றாமல் இருக்குமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என சிபாரிசு செய்துள்ளதாகவும், அதனை பாராளுமன்றம், சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் மேலதிக நடவடிக்கைகளுக்காக, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது ஆணையம் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றார்.

அரசாங்கத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை (2/3) இருப்பதாகவும், எனவே கோரிக்கைகளை முன்வைக்கும் போது எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக நாட்டை மூடாமல் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆட்சி செய்ய முடிந்தால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் அனைத்து திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும் என வலியுறுத்தினார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு மேலதிகமாக, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mishukoshi Hideiki அவர்களும் கலந்துகொண்டார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

"நான் சரி இல்லை என்றால்", எதிர்க்கட்சியா மாற்று?' ஜனாதிபதி கேட்கிறார் | Tamil Leader | We Lead the Nation