Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்த அரசுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது! லக்ஸ்மன் கிரியெல்ல

T

The Leader Desk

நவம்பர் 24, 2021 • 3:23 PM

இந்த அரசுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது! லக்ஸ்மன் கிரியெல்ல 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • ஆகவே, நீதிமன்றத்தை மிதித்துக்கொண்டு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாது.
  • மெலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் எமக்கு இன்னமும் வழங்கவில்லை?
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் எமக்கு இன்னமும் வழங்கவில்லை? சமல் ராஜபக்ஷ (Samal Rajapaksa) உபகுழு அறிக்கையை எமக்கு வழங்க முடியுமா முடியாதா? பிரதமர் சபையில் உள்ளார். அவரிடமே இவற்றைக் கேட்கின்றோம்.

ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மாற்றப்பட்டு புதிய பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஒவ்வொருவரை இலக்குவைத்து அவர்களைத் தெரிவு செய்து வழக்குத் தொடுக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிந்தவர் மீது வழக்குத் தொடுக்கப்படாது அப்போதைய ஜனாதிபதியைக் குற்றவாளியாக்குவதன் மூலமாக இந்த வழக்குத் தோற்கடிக்கப்படும்.

அதுமட்டுமல்ல ஒரு சிலரது தகவல்களை அரசு அழித்துவிட்டது.

ஆகவே, நீதிமன்றத்தை மிதித்துக்கொண்டு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாது.

இதேவேளை, சகல அமைச்சுகளுக்கும் செயலணிகள் உருவாக்கப்பட்டு அமைச்சரவையைப் பலவீனப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி சகல அதிகாரங்களையும் செயலணிகளை வைத்துக் கொண்டு இயக்கி வருகின்றார்.

அதேபோல் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்கி நாட்டுக்குத் தீ வைக்க முடிவெடுத்துள்ளனர்.

இனவாதத்தை உருவாக்கி நாட்டைத் தீ வைக்கவே அரச தரப்பினர் நினைக்கின்றனர்.

இந்த அரசுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களின் துருப்புச்சீட்டு இனவாதம் மட்டுமே. அதனைத்தான் அவர்கள் முன்னெடுக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...