Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நவம்பர் மாதத்தின் பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்!

T

The Leader Desk

நவம்பர் 24, 2021 • 3:00 PM

நவம்பர் மாதத்தின் பின்னர்  உள்ளுராட்சி சபைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (23) கூடிய தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக சகல மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
  • இது குறிந்து ஆராய்ந்து ஆணையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதற்கிடையே டிசம்பர் 31ம் திகதி ஆகும்போது 2021க்கான வாக்காளர் பட்டியல் ஒப்பமிடப்பட்டால் எதிர்வரும் தேர்தலில் அந்த வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • ஆகவே இம்முறை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இருப்பின் அது சம்பந்தமான தகவல்களை டிசம்பர் 3ம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

நேற்று (23) கூடிய தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக சகல மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. நவம்பர் மாதத்தின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தில் வெளியிடக் கூடிய நிலைமை உள்ளது.

எவ்வகையிலாவது மேற்படி தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் அதற்குத் தேவையான முதற்கட்ட நடவடிக்கையாக படிவங்கள் தயாரித்தல், அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் கணக்கெடுப்பு, வாக்களிப்பு நிலையங்களை ஆய்வுக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது.

இது குறிந்து ஆராய்ந்து ஆணையத்திற்கு அறிவிக்குமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிசம்பர் 31ம் திகதி ஆகும்போது 2021க்கான வாக்காளர் பட்டியல் ஒப்பமிடப்பட்டால் எதிர்வரும் தேர்தலில் அந்த வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இம்முறை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இருப்பின் அது சம்பந்தமான தகவல்களை டிசம்பர் 3ம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...