Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் வவுனியா வடக்கு தமிழ் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி! கஜேந்திரகுமார்

T

The Leader Desk

நவம்பர் 23, 2021 • 4:56 PM

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் வவுனியா வடக்கு தமிழ் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி! கஜேந்திரகுமார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது முற்றிலும் வவுனியா வடக்கின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டார்.
  • இதேவேளை உலகில் பொலிஸ் சித்திரவதைகளுக்கு எதிரான முறைப்பாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
  • இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரியபோதும் இதுவரை சந்திப்புக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால், வடமத்திய மாகாணத்தின் கெப்பிட்டிகொல்லாவயின் 600 குடும்பங்களையும் பதவிய பகுதியின் 430 குடும்பங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளா் பிரிவுடன் இணைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது முற்றிலும் வவுனியா வடக்கின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடு என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரியபோதும் இதுவரை சந்திப்புக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

இது வடக்கை பொறுத்தவரை உணர்ச்சிவயப்படும் பிரச்சனை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை உலகில் பொலிஸ் சித்திரவதைகளுக்கு எதிரான முறைப்பாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது பெருமைப்படக்கூடிய விடயம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

எனவே இந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு, சுயாதீனமாக இயங்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...