Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை! சார்ள்ஸ் நிர்மலநாதன்

T

The Leader Desk

நவம்பர் 22, 2021 • 4:30 PM

பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை! சார்ள்ஸ் நிர்மலநாதன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (22), வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பிற்கு 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக உலகப்பரப்பில் உள்ள ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் அதிக பற்றுக்கொண்டவர்கள்.
  • இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்களில் 50 வீதமானவர்கள் வடக்கு கிழக்கின் புலம்பெயர் தமிழர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (22), வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கோவிட் தொற்று ஒரு காரணமாக இருந்தாலும் கூட நாட்டின் தவறான பொருளாதார கொள்கையும் முகாமைத்துவமுமே பிரதான காரணமாகும்.

பாதுகாப்பிற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குவதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாகும். யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து பாதுகாப்பிற்கு 3790.8 பில்லியன் ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமையென அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால் பாதுகாப்பு படைத்தரப்பே இந்த நாட்டுக்கு சுமையாகும். ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை தக்கவைக்க இராணுவ ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வாக்கு வங்கியை தக்கவைக்கவுமே இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அரச சேவையில் நிபுணத்துவ அதிகாரிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றனர்.

பயங்கரவாத தடை சட்டம் காரணமாக வெளிநாட்டிலுள்ள முதலீட்டாளர்களை முதலீடுசெய்ய தடையாக உள்ளது. குறிப்பாக உலகப்பரப்பில் உள்ள ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் அதிக பற்றுக்கொண்டவர்கள்.

அவர்கள் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும், பயங்கரவாத பிரிவுக்கு அழைத்து பயமுறுத்துவதும் அவர்களுடைய முதலீட்டை தடுக்கின்றது. இலங்கைக்கு வருமானத்தை தருகின்ற சுற்றுலாப்பயணிகள் மிக முக்கியமானதாகும்.

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருபவர்களில் 50 வீதமானவர்கள் வடக்கு கிழக்கின் புலம்பெயர் தமிழர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் வடக்கு கிழக்கு மீனவர்கள், விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பதட்டமான சூழலில் உள்ளனர்.

தமிழர்களின் இருப்பை அழிக்க அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுத்து வருகின்றது. அவரசமாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றை நாம் கண்டிக்கின்றோம் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை! சார்ள்ஸ் நிர்மலநாதன் | Tamil Leader | We Lead the Nation