Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நனோ யூரியா ஊழல்: மகிந்தானந்த- ஷசீந்திர கடும் வாக்குவாதத்தில்!

T

The Leader Desk

நவம்பர் 22, 2021 • 10:17 AM

நனோ யூரியா ஊழல்: மகிந்தானந்த- ஷசீந்திர கடும் வாக்குவாதத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “எனது அமைச்சு இயற்கை உரத்திற்கானது.
  • எவ்வாறாயினும், நனோ யூரியா விவகாரம் தனது சொந்த அமைச்சினால் கையாளப்படவில்லை என்றும், இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவின் கீழ் உள்ள உர அமைச்சினால் கையாளப்பட்டது என்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 18ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
  • இயற்கை உரம் என்பது உரத்தை இறக்குமதி செய்வது அல்ல.
எழுத்து அளவு:

இயற்கை உர உற்பத்தி, ஊக்குவிப்பு மற்றும் விநியோக ஒழுங்குமுறை மற்றும் இயற்கை உரங்கள், இயற்கை உணவு, காய்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை,நெல்,விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாயம் ஆகியவற்றின் விநியோகத்தை ஊக்குவித்தல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவின் தலையீட்டிலேயே நனோ யூரியா இறக்குமதி மேற்கொள்ளப்பட்டதாக வெளியான கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எனது அமைச்சு இயற்கை உரத்திற்கானது. இயற்கை உரம் என்பது உரத்தை இறக்குமதி செய்வது அல்ல. எனக்கும் அப்படிப்பட்ட இறக்குமதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஜூன் மாதம் இந்த அமைச்சுப் பொறுப்பை நான் பொறுப்பேற்பேன். இது தொடர்பான அனைத்து முடிவுகளும் விவசாய அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது. குறிப்பாக நான் இதில் ஈடுபடவில்லை.

எவ்வாறாயினும், நனோ யூரியா விவகாரம் தனது சொந்த அமைச்சினால் கையாளப்படவில்லை என்றும், இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவின் கீழ் உள்ள உர அமைச்சினால் கையாளப்பட்டது என்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 18ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நாம் வினவிய போது ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறுகையில், உரம் தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களையும் அது தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் ஜனாதிபதி அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவின் அமைச்சுக்கு அரச வர்த்தமானி மூலமாக வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தேசிய உர செயலகம், இலங்கை உர நிறுவனம், கொழும்பு வர்த்தக உர நிறுவனம், ஜனதா பெர்டிலைசர் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகியன சசீந்திர ராஜபக்ஷவுக்கு மாற்றப்பட்டு சர்ச்சைக்குரிய சீன உரம் செலுத்தும் உத்தரவை லங்கா உரக்கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு வர்த்தக உர நிறுவனம் ஊடாக இந்தியாவில் இருந்து யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எமக்கு தகவல் வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரி, உர மாதிரிகளை பரிசோதித்தல், விலை மனுக்கோரல் உர உற்பத்தி, உர இறக்குமதி, கொள்வனவு தீர்மானங்கள் மற்றும் விநியோகம் ஆகிய பணிகள் இராஜாங்க அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இராஜாங்க அமைச்சகத்தின் கீழ் உரச் சட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து நனோ யூரியா இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் தம்மிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நனோ யூரியா ஊழல்: மகிந்தானந்த- ஷசீந்திர கடும் வாக்குவாதத்தில்! | Tamil Leader | We Lead the Nation