Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை தாமதிப்பதால் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் இக்கட்டான நிலையில்! வசந்த முதலிகே

T

The Leader Desk

நவம்பர் 21, 2021 • 4:58 PM

மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை தாமதிப்பதால் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் இக்கட்டான நிலையில்! வசந்த முதலிகே

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மஹபொல புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு அரசாங்கம் வழங்கும் புலமைப் பரிசில்களும் மாதக்கணக்காக வழங்கப்படவில்லையெனவும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கணைப்பாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டுகிறார்.
  • தற்போதைய வாழ்க்கை செலவு காரணமாக மஹபொல கொடுப்பனவை ரூ10,000 வரை அதிகரிக்குமாறும், கடந்த காலத்தில் அ.ப.மா.ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
  • களனி பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இதுவரை 7 மாதங்களுக்கான மஹபொல கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதுடன், ஏனை பல்கலைக் கழகங்களிலும் மூன்று நான்கு மாதங்கள் தாமதிக்கப்பட்டுள்ளன.
  • ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் 8 மாதங்களாக புலமைப் பரிசில் வழங்கப்படவில்லை.
எழுத்து அளவு:

மஹபொல புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு அரசாங்கம் வழங்கும் புலமைப் பரிசில்களும் மாதக்கணக்காக வழங்கப்படவில்லையெனவும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கணைப்பாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டுகிறார்.

தற்போதைய வாழ்க்கை செலவு காரணமாக மஹபொல கொடுப்பனவை ரூ10,000 வரை அதிகரிக்குமாறும், கடந்த காலத்தில் அ.ப.மா.ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கு அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. என்றாலும், தற்போது வழங்கப்படும் பணத்தையும் நீண்டகாலத்திற்கு தாமதிப்பதை ஏற்க முடியாதெனவும் மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

குறைந்த வருமானமுடைய குடும்பங்களிலிருந்து பல்கலைக் கழக கல்வி வரம் கிடைக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படுவதைப் போல மாதாந்தம் ரூ.5,000 வீதம் ஒரு வருடத்திற்கு 10 மஹபொல தவனைகளும், ஏனைய மாணவர்களுக்கு மாதமொன்றிற்கு ரூ2,5000 வீதம் வருடத்திற்கு 10 புலமைப் பரிசில் தவனைகளும் கிடைக்க வேண்டும். ஆனால், அந்த உதவி நிதியை சரியான நேரத்திற்கு வழங்குவதை அதிகாரிகள் தவிர்த்துள்ளனர். களனி பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இதுவரை 7 மாதங்களுக்கான மஹபொல கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்பதுடன், ஏனை பல்கலைக் கழகங்களிலும் மூன்று நான்கு மாதங்கள் தாமதிக்கப்பட்டுள்ளன.

ரஜரட்ட பல்கலைக் கழகத்தில் 8 மாதங்களாக புலமைப் பரிசில் வழங்கப்படவில்லை. ஏனைய பல பலகலைக்கழங்களில் ஒகஸ்ட் மாதத்தின் பின்னர மஹபொல மற்றும் மாணவர் உதவிநிதி வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

பெருந்தொற்று காரணமாக கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்நிலை (ஒன் லைன) கல்வி நடவடிக்கைகளுக்காக தவனை அடிப்படையில் வாங்கப்பட்ட கணினி மற்றும் டெப்களுக்கு செலுத்த வேண்டிய தவனை பணத்தை செலுத்த முடியாத நிலையில் அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளனர்.

இது குறித்து கருத்து கூறிய அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, மஹபொல மற்றும் மாணவர் உதவிநிதி கொடுப்பனவுகள் தாமதமாவது சம்பந்தமாக பல்கலைக் கழக மானிய ஆணைக் குழு மற்றும் மஹபொல புலமைப் பரிசில் நம்பிக்கை நிதியத்தில் விசாரித்த போதிலும் சரியான பதில் கிடைக்கவில்லையெனக் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...