Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

லண்டனில் ஏற்பட்ட தீயினால் இலங்கையர்கள் நால்வர் பலி!

T

The Leader Desk

நவம்பர் 20, 2021 • 5:19 PM

லண்டனில் ஏற்பட்ட தீயினால் இலங்கையர்கள் நால்வர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த சம்பவம் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
  • சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், 4 மற்றும் 1 வயதான இரு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட குறித்த குடும்பம் மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

குறித்த சம்பவம் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

Hamilton சாலையில், Bexleyheath கட்டிடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டது.

சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உறவினர்கள் எனத் தெரிகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், 4 மற்றும் 1 வயதான இரு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட குறித்த குடும்பம் மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ பரவிய சந்தர்ப்பத்தில், மனைவி  தனது கணவனுக்கு அழைப்பை மேற்கொண்டு தீ தீ என கதறியுள்ளதாக அவரது கணவர் கூறியுள்ளார்.

சம்பவத்தையடுத்து அயல்வீடுகளில் உள்ள அனைவரும் ஜெகா ஜெகா என கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கணவனின் மைத்துனராகக் கருதப்படும் ஒருவர், மேல்மாடி ஜன்னலில் இருந்து குதித்ததில் உயிருக்கு ஆபத்தான காலில் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.

தீ பரவிய வீட்டிற்கு முன்பாக மலர்களை வைத்து, அயலவர்கள் அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் நடத்தி வருகின்றனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...