அதேவேளை நேற்று மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,108ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 13 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதுடன் இவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


