Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கருத்துக் கோரல்!

T

The Leader Desk

நவம்பர் 20, 2021 • 4:04 PM

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கருத்துக் கோரல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் sasa.execo@gmail.com என் மின்னஞ்சல் ஊடாக நவம்பர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவையில் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க முன்மொழியப்பட்டது.
  • ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
எழுத்து அளவு:

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்வினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு,

முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்திடம் அறிக்கை சமர்பிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கை தயாரிக்கும் போது, ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள குழு தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் பதுல ஸ்ரீ ரோஹன டி சில்வா மற்றும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் செயலாளர் பிரதீப் லக்சாந்த ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் sasa.execo@gmail.com என் மின்னஞ்சல் ஊடாக நவம்பர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா நிர்வாக சேவைகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஐந்து உறுப்பினர்களின் பெயர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நவம்பர் 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவையில் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க முன்மொழியப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்து கருத்துக் கோரல்! | Tamil Leader | We Lead the Nation