Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உயிர் நீத்தவர்களை நினைவுகூர இடமளிக்க மறுத்தால்,இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!அடைக்கலநாதன்

T

The Leader Desk

நவம்பர் 19, 2021 • 9:14 AM

உயிர் நீத்தவர்களை நினைவுகூர இடமளிக்க மறுத்தால்,இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!அடைக்கலநாதன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மரித்தவா்களை மதிப்பதை அரசாங்கம் தடுக்கிறது.
  • இதேவேளை இலங்கையில் சட்டமாக இருக்கின்ற 13வது திருத்தத்தை உரியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் கோாிக்கை விடுத்தார்.
  • இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜி.எல் பீரிஸ், மாகாணசபை தேர்தல் தாமதமாவதற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.
  • இதேவேளை 2022 ஆம் ஆண்டுப் பாதீட்டில் விஹாரைகள் அமைப்பதற்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மரித்தவா்களை மதிப்பதை அரசாங்கம் தடுக்கிறது.

எனினும் குறித்த நிகழ்வுகளை நினைவுகூர அரசாங்கம் அனுமதித்தால், உயிர் நீத்தவர்களுக்கான நிகழ்வுகளை சுதந்திரமாக நிகழ்த்திவிட்டு தமது உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள்.

இல்லையேல், இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதேவேளை இலங்கையில் சட்டமாக இருக்கின்ற 13வது திருத்தத்தை உரியவகையில் செயற்படுத்தி இந்தியாவுடன் நல்லுறவை, இலங்கை அரசாங்கம் வளர்த்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என்றும் அவர் கோாிக்கை விடுத்தார்.

எனவே மாகாணசபைகளின் அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜி.எல் பீரிஸ், மாகாணசபை தேர்தல் தாமதமாவதற்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று குற்றம் சுமத்தினார்.

எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபைத் தேர்தலைப் பற்றி கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியம்.

எனினும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களைப் பற்றியே தாம், கோாிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுப் பாதீட்டில் விஹாரைகள் அமைப்பதற்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் வடக்குகிழக்கில் இன்னும் விஹாரைகள் அமைக்கப்படப்போகிறதா? என்று செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உயிர் நீத்தவர்களை நினைவுகூர இடமளிக்க மறுத்தால்,இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்!அடைக்கலநாதன் | Tamil Leader | We Lead the Nation