Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரசாங்கம் தான்தோன்றித் தனமாக உரத்திற்கு தடை விதித்ததால் மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு!

T

The Leader Desk

நவம்பர் 18, 2021 • 3:46 PM

அரசாங்கம் தான்தோன்றித் தனமாக உரத்திற்கு தடை விதித்ததால் மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோவிட் இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து வருகின்ற விவசாயிகள் தொடர்ச்சியாக உரப்பிரச்சினைகளுக்கும், முகம் கொடுத்து வருவதுடன், இடையில் காலநிலை மாற்றத்தினையும் எதிர் கொண்டு விவசாய நடவடிக்கைகளை பாரிய சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
  • இதன் விளைவு தொடர்ச்சியாக விவசாயிகளை பாதித்து வரும் நிலையில் நுவரெலியாவில் வெஸ்டவோட் பிரதேச விவசாயிகளும் பாரியளவில் பாதித்து வரும் நிலை இன்று உச்சம் பெற்றுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
  • மேலும் 50 கிலோ கிராம் அடங்கிய இரசாயண உரப் பொதியை 1500 ரூபாய் என்ற நிர்ணைக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக 05 ஆயிரம் தொடக்கம் 06ஆயிரம் ரூபாய்க்கு விற்பணை செய்யப்படுவதால் அதிக விலைக் கொடுத்து வாங்கி விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

கோவிட் இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து வருகின்ற விவசாயிகள் தொடர்ச்சியாக உரப்பிரச்சினைகளுக்கும், முகம் கொடுத்து வருவதுடன், இடையில் காலநிலை மாற்றத்தினையும் எதிர் கொண்டு விவசாய நடவடிக்கைகளை பாரிய சிரமத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தருணத்தில் நுவரெலியா வெஸ்டவோட் பிரதேச விவசாயிகள் உற்பத்தி செய்து வரும் மரக்கறி வகைகளை பாராமரிப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

தாம் இப்பிரதேசத்தில் பாரியளவில் விவசாயத்தில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கும் விவசாயிகள் கடந்த காலங்களில் விவசாயத்தினால் கூடுதலான நன்மையை பெற்று வாழ்வாதாரத்தை ஊக்கப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அரசாங்கம் விவசாயத்துறையை ஊக்குவிக்க எதிர்கால திட்டம் ஒன்றை முன்கூட்டியே அறிவிக்காத அரசாங்கம் திடீரென தான்தோன்றி தனமாக உரத்தை தடை செய்து பாரிய சிக்கலை கடந்த காலங்களில் உண்டாக்கியது.

இதன் விளைவு தொடர்ச்சியாக விவசாயிகளை பாதித்து வரும் நிலையில் நுவரெலியாவில் வெஸ்டவோட் பிரதேச விவசாயிகளும் பாரியளவில் பாதித்து வரும் நிலை இன்று உச்சம் பெற்றுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக உரப்பிரச்சினையே பிரதான பிரச்சினையாக உள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் பயிர்களுக்கு ஏற்ற உரங்களை வழங்குவதில் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் 50 கிலோ கிராம் அடங்கிய இரசாயண உரப் பொதியை 1500 ரூபாய் என்ற நிர்ணைக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக 05 ஆயிரம் தொடக்கம் 06ஆயிரம் ரூபாய்க்கு விற்பணை செய்யப்படுவதால் அதிக விலைக் கொடுத்து வாங்கி விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு உர பிரச்சினைக்கு முகம் கொடுத்து வாழ்வாதார தொழிலான விவசாயத்தை முன்னெடுக்கின்ற வேளையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் ஏற்றம் கண்டாலும் மரக்கறிகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்து சந்தைக்கு அனுப்பி இலாபம் பெற முடியாது உரத்தட்டுப்பாடு தம்மை நசுக்கி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் விலையேற்றம் உயர்ந்துள்ளதாகவும், இரசாயண உரத்தட்டுப்பாட்டை நீக்க அரசு முன்வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் மரக்கறி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியுமென வெஸ்வாடோ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நுவரெலியா கண்டி பிரதான வீதியில் வீதியோரங்களில் மரக்கரி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசாங்கம் தான்தோன்றித் தனமாக உரத்திற்கு தடை விதித்ததால் மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு! | Tamil Leader | We Lead the Nation