Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை!

T

The Leader Desk

நவம்பர் 18, 2021 • 3:24 PM

நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்ரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
  • இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
  • இந்நிலையில், கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று தற்போதைய அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.
எழுத்து அளவு:

வருடம்தோறும் கார்த்திகை  மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2009ஆம்  ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்ரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில்,  கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று தற்போதைய அரசாங்கம் மாவீரர் நாள்  நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து, அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஜயன்கன்குளம் ஆகிய 07 பொலிஸ் நிலையங்களை  சேர்ந்த பொலிஸாரின்  விண்ணப்பத்தின் அடிப்படையில், மேற்படி  47 பேருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கே இந்தத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...