Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரைகள் அமைக்கப்படுவது யாருக்காக! ஸ்ரீநேசன்

T

The Leader Desk

நவம்பர் 17, 2021 • 4:20 PM

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரைகள் அமைக்கப்படுவது யாருக்காக! ஸ்ரீநேசன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • “எத்தனையோ வீதிகள் உடைந்து, சிதைந்து கிடக்கின்ற நிலையில், காட்டின் ஊடாக நெளுக்கல் மலைக்கான புதிய வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள வடமுனையில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நெளுக்கல் மலையில் விஹாரை ஒன்றை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

“பொலன்னறுவை மாவட்ட சொறுவில், கறுப்பளை, முத்துக்கல், மன்னம்பிட்டி மற்றும் வெலிக்கந்த போன்ற கிராமங்களில் இருந்து உயிரிழப்புகள், சொத்து இழப்புகளுக்கு மத்தியில் வடமுனை ஊத்துச்சேனையில் முன்னர் குடியேறிய சிறுபான்மையின மக்களை நோக்கி மேலுமொரு பெரும்பான்மையினக் குடியேற்றம் துரத்தி வருகின்றது.

“பிக்குகள், தொல்லியலாளர்கள், ஆளுநர் தரப்பினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அடிக்கடி அங்கு பிரசன்னமாகி வருகின்றனர்.

“மயிலத்தமடு, மாதவணை, காரமுனை, நெளுக்கல் மலை என்று மட்டக்களப்பு மண்ணை ஆக்கிமிப்பதற்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்தும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன.

“எத்தனையோ வீதிகள் உடைந்து, சிதைந்து கிடக்கின்ற நிலையில், காட்டின் ஊடாக நெளுக்கல் மலைக்கான புதிய வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்படவுள்ளது.

“வியத்மக அமைப்பு சார்ந்தவர்கள் சிங்கள மக்களை மாத்திரம் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலிலிலும் பொதுஜனப் பெரமுனக் கட்சியை வெல்லச்செய்து விடலாம் என்ற மனப்பாங்குடன் செயற்படுகின்றனர்.

“தொல்லியலாளர்களும், வியத்மக அமைப்பினரும் தமிழ் பேசும் மக்களைத் தொல்லைப்படுத்துவதென்றே சபதம் எடுத்து விட்டார்கள்.

“இப்படியான நிலையில், பொதுஜனப் பெரமுனக் கட்சியிடம் உள்நாட்டுப் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கான பொறிமுறைகள் இருக்கின்றனவே ஒழிய, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்தப் பொறிமுறையும் இல்லை” என்றார்.      

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...