Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பசில் வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

நவம்பர் 17, 2021 • 4:36 AM

பசில் வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வுக்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்து நிதியமைச்சிடம் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அது வழங்கப்படவில்லை என அரச வங்கி ஊழியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • இதனால் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் 25,000 ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று [16] பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • "அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கி நிர்வாகம் 2021-2023 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிதி அமைச்சகம் அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினையை தள்ளிப்போடுவதை ஊக்குவிப்பதாக,"தெரிவித்தார்.
  • சம்பள உயர்வுக்கு பயன்படுத்தப்படும் பணம் அரச வங்கிகளால் பயன்படுத்தப்படுவதால், அமைச்சகம் பண நெருக்கடியை எதிர்கொள்ளாது என்றார்.
எழுத்து அளவு:

அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வுக்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்து நிதியமைச்சிடம் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அது வழங்கப்படவில்லை என அரச வங்கி ஊழியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி மற்றும் பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் 25,000 ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று [16] பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வங்கி நிர்வாகம் 2021-2023 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிதி அமைச்சகம் அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினையை தள்ளிப்போடுவதை ஊக்குவிப்பதாக,"தெரிவித்தார்.

சம்பள உயர்வுக்கு பயன்படுத்தப்படும் பணம் அரச வங்கிகளால் பயன்படுத்தப்படுவதால், அமைச்சகம் பண நெருக்கடியை எதிர்கொள்ளாது என்றார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இல்லாத காரணத்தினால் வங்கி ஊழியர் சங்கங்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பதவி உயர்வு, சம்பளம் உள்ளிட்ட சேவை விதிமுறைகள் உட்பட நிதி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட மூன்று வருட கூட்டு ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படாமைக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBU) அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கின் ஐந்து முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...