Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொலிசாரின் வீதி தடைகளையும் மீறி சமகி ஜன பலவேகயவின் ஆர்ப்பாட்டம் வீதி வழியாக கொழும்புக்கு! (வீடியோ)

T

The Leader Desk

நவம்பர் 16, 2021 • 7:52 AM

பொலிசாரின் வீதி தடைகளையும் மீறி சமகி ஜன பலவேகயவின் ஆர்ப்பாட்டம் வீதி வழியாக கொழும்புக்கு!  (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டம் தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களை அரசு எழுப்பியுள்ளது.
  • இந்த போராட்டம் நடத்துவதை தடைசெய்யக் கோரி பொலிசாரால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கையை 6 நீதிமன்றங்கள் நிராகரித்த போதிலும் 5 நீதிமன்றங்கள் பொலிசாருக்கு சாதகமாக பதில் அளித்திள்ளன.
  • மரைக்கார், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் ஊழலை ஒழிப்பதற்காக இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
எழுத்து அளவு:

போராட்டம் தொடர்பாக பல்வேறு சட்ட சிக்கல்களை அரசு எழுப்பியுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் சமகி ஜன பலவேகய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த போராட்டத்தில் பங்கேற்க இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புக்கு பஸ்களில் வரும்  போராட்டக்காரர்களிடம் அசாதாரன கேள்விகளை கேட்டு பொலிசார் அனாவசியமான முறையில் தடுத்து வருவதாக சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ள வீடியோக்களில் இருந்து தெரியவருகின்றது.

 

நீதிமன்றங்களின் இருவேறு கருத்துகள்!

இந்த போராட்டம் நடத்துவதை தடைசெய்யக் கோரி பொலிசாரால் நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கையை 6 நீதிமன்றங்கள் நிராகரித்த போதிலும் 5 நீதிமன்றங்கள் பொலிசாருக்கு சாதகமாக பதில் அளித்திள்ளன.

போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான எஸ்.எம். மரைக்கார், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் ஊழலை ஒழிப்பதற்காக இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

எவ்வாறாயினும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார சட்டங்களை மீறி கொழும்புக்கு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திட்டமிட்டபடி இன்று கொழும்பில் போராட்டம் நடத்தப்படும் என சமகி ஜனபலவேகய தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...