Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கத்தோலிக்க திருச்சபை வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கல் பற்றி சர்வதேச சமூகத்திற்கு கூறுகிறது!

T

The Leader Desk

நவம்பர் 12, 2021 • 4:19 PM

கத்தோலிக்க திருச்சபை வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கல் பற்றி சர்வதேச சமூகத்திற்கு கூறுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கல் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக எச்சரித்துள்ள போதிலும் கத்தோலிக்க மதகுருமார்கள் சர்வதேச பிரதிநிதி ஒருவருடன் பேசும் அரிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.
  • யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை, மக்களின் வாழ்க்கை மற்றும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இதேவேளை, “யாழ்ப்பாணத்தில் 14,000 பேரும் கிளிநொச்சியில் 4,000 பேரும் காணியின்றி தவிக்கின்றனர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சிங்கள மக்களை வரவழைத்து சனத்தொகையை திட்டமிட்டு மாற்றியமைப்பதாக யாழ்ப்பாணத்துக்கான இலங்கைத் தூதுவர் டொமினிக் பெர்க்லருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கல் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக எச்சரித்துள்ள போதிலும் கத்தோலிக்க மதகுருமார்கள் சர்வதேச பிரதிநிதி ஒருவருடன் பேசும் அரிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை, மக்களின் வாழ்க்கை மற்றும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரைச் சேர்ந்த ஃபிடெலிஸ் பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ஞானப்பிரகாசம், திருகோணமலை நோயல் இம்மானுவேல், மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா ஆகியோர் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்து சிங்களவர்களைக் குடியேற்றுவதில் தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணிகளை கைவிட்டுள்ளதாகவும், இரு பகுதிகளிலும் இந்திய அரசின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அவர்கள் சுவிஸ் தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, “யாழ்ப்பாணத்தில் 14,000 பேரும் கிளிநொச்சியில் 4,000 பேரும் காணியின்றி தவிக்கின்றனர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் இன்னும் தமிழ் மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் சிங்கள மக்கள் கொண்டு வரப்பட்டு காணிகளை பகிர்ந்தளித்து இன்னொரு தேசத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்" என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...