Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உழைப்புச் சுரண்டலை நீடிக்கக் கூடிய சட்டம் பாராளுமன்றத்திற்கு!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 2:06 PM

உழைப்புச் சுரண்டலை நீடிக்கக் கூடிய சட்டம் பாராளுமன்றத்திற்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 வரை நீடிப்பது சம்பந்தமான சட்ட வரைவிற்கு தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனை குழுவின் அனுமதி நேற்று (09) கிடைத்துள்ளதோடு, நாளை (11) அது விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
  • ஆனால், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை இந்த சட்டத்தின் மூலம் 60 வயது வரை நீடிக்கப்படுகிறது.
  • இந்த சட்டமூலம் தொடர்ப்பில் தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் தலைமையில் கூடியது.
எழுத்து அளவு:

தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 வரை நீடிப்பது சம்பந்தமான சட்ட வரைவிற்கு தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனை குழுவின் அனுமதி நேற்று (09) கிடைத்துள்ளதோடு, நாளை (11) அது விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்ப்பில் தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் தலைமையில் கூடியது. இந்த சட்டமூலத்தைப் போன்றே, ஒவ்வொரு தொழிலாளியினதும் தொழிலை நிறைவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட வரைவிற்கும் ஆலோசனைக் குழுவின் அனுமதி இதன்போது கிடைத்துள்ளது.

இதுவரை தனியார் துறையில பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆகக் குறைந்த வயதெல்லை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுடன், பெரும்பாலும் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதாயின் அதற்கு தொழில் வழங்குநர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருசாராருக்கும் மத்தியில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை இந்த சட்டத்தின் மூலம் 60 வயது வரை நீடிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை குழு கூட்டதில் ராஜாங்க அமைச்சர் பிரயங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான டப்.டீ.ஜே. செனவிரத்த, வடிவேல் சுரேஷ், அசோக பிரியன்த மற்றும் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், ஜே.வி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் கலந்து கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

தனியார் துறை ஊழியர்களின் சேவையை நிறைவு செய்தல், ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து விடுவிப்பதை தாமதப்படுத்தல் மற்றும உழைப்புச் சுரண்டலை நீடிக்க சட்டத் திருத்தமொன்று ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 வரை நீடிப்பது சம்பந்தமான சட்ட வரைவிற்கு தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனை குழுவின் அனுமதி நேற்று (09) கிடைத்துள்ளதோடு, நாளை (11) அது விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்ப்பில் தொழிலாளர் விவகார அமைச்சின் ஆலோசனைக் குழு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் தலைமையில் கூடியது. இந்த சட்டமூலத்தைப் போன்றே, ஒவ்வொரு தொழிலாளியினதும் தொழிலை நிறைவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட வரைவிற்கும் ஆலோசனைக் குழுவின் அனுமதி இதன்போது கிடைத்துள்ளது.

இதுவரை தனியார் துறையில பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆகக் குறைந்த வயதெல்லை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுடன், பெரும்பாலும் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதாயின் அதற்கு தொழில் வழங்குநர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருசாராருக்கும் மத்தியில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை இந்த சட்டத்தின் மூலம் 60 வயது வரை நீடிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனை குழு கூட்டதில் ராஜாங்க அமைச்சர் பிரயங்கர ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான டப்.டீ.ஜே. செனவிரத்த, வடிவேல் சுரேஷ், அசோக பிரியன்த மற்றும் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், ஜே.வி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர் கலந்து கொள்ளவில்லையென செய்திகள் கூறுகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உழைப்புச் சுரண்டலை நீடிக்கக் கூடிய சட்டம் பாராளுமன்றத்திற்கு! | Tamil Leader | We Lead the Nation