Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மெல்ல மெல்ல குறையும் ஞானசாரரின் அதிகாரங்கள்!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 1:31 PM

மெல்ல மெல்ல குறையும் ஞானசாரரின் அதிகாரங்கள்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியல் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நீதியமைச்சின் சட்ட வரைவுகளை பரிசீலித்தல் போன்ற அதிகாரங்கள் அதற்கு இருந்தன.
  • எனவே, ஆரம்பத்தில் வெளியிடட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி கடந்த 6ம் திகதியிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இதற்கிடையே இந்த செயலணியில் உறுப்பினர்களாக செயற்பட்ட பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இன்திகாப் ஆகியோர் இந்த செயலணியிலிருந்து சமீபத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வந்தன.
எழுத்து அளவு:

இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி அந்த செயலணியானது இதற்கு பின்னர், இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை செயற்படுத்துவது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மற்றும் மேற்படி கோட்பாட்டை ஆய்வு செய்ததன் பின்னர் அதற்கான இலங்கைக்கு பொருத்தமான கோட்பாட்டை தயாரிப்பதற்கான முன்மொழிவை மாத்திரமே சமர்ப்பிக்கும்.

இந்த ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியல் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நீதியமைச்சின் சட்ட வரைவுகளை பரிசீலித்தல் போன்ற அதிகாரங்கள் அதற்கு இருந்தன.

இந்த தீர்மானம் சம்பந்தமாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது எதிர்ப்பை தெரிவித்திருந்ததுடன் தனது அமைச்சுப் பதவியிலிருந்தும், பா.உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கூறி ஜனாதிபதியிடம் கடிதமொன்றை ஒப்படைத்திருந்தார். என்றாலும் அவரது ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே, ஆரம்பத்தில் வெளியிடட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி கடந்த 6ம் திகதியிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த செயலணியில் உறுப்பினர்களாக செயற்பட்ட பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இன்திகாப் ஆகியோர் இந்த செயலணியிலிருந்து சமீபத்தில் விலகியுள்ளதாக செய்திகள் வந்தன.

இதன்படி, இந்த செயணிக்கு புதிதாக மூன்று பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார். ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி சத்குணராஜா, மற்றும் அய்யாம்பிள்ளை தயாநந்த ராஜா ஆகிய மூவருமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியால் புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலமே இந்த மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...