Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'ஓரே நாடு ஒரே சட்டம்' செயலணி தொடா்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உாிய பதில் வழங்கப்படவில்லை!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 6:17 AM

'ஓரே நாடு ஒரே சட்டம்' செயலணி தொடா்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உாிய பதில் வழங்கப்படவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏனெனில் அவா் இந்த வா்த்தமானி தொடா்பில் முன்னதாகவே அறிந்திருக்கவில்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
  • எனினும் அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உாிய பதில் வழங்கப்படவில்லை.
  • இலங்கையின் நீதியமைச்சருக்கு தொியாதநிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணி தொடா்பில், நாடாளுமன்றத்தில் இன்று பிரதமாிடம் விளக்கம் கோாியபோது, பிரதமா் வழங்கிய பதிலில் திருப்தியடையவில்லை என்று கூறியபின்னரே அனுரகுமார திசாநாயக்க, தமது இந்தக்கருத்தை வெளியிட்டாா்.
எழுத்து அளவு:

ஏனெனில் அவா் இந்த வா்த்தமானி தொடா்பில் முன்னதாகவே அறிந்திருக்கவில்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கையின் நீதியமைச்சருக்கு தொியாதநிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணி தொடா்பில், நாடாளுமன்றத்தில் இன்று பிரதமாிடம் விளக்கம் கோாியபோது, பிரதமா் வழங்கிய பதிலில் திருப்தியடையவில்லை என்று கூறியபின்னரே அனுரகுமார திசாநாயக்க, தமது இந்தக்கருத்தை வெளியிட்டாா்.

எனினும் இதன்போது பதிலளித்த பிரதமா் மஹிந்த ராஜபக்ச, இந்த செயலணி தொடா்பான வா்த்தமானி அறிவித்தல் தொடா்பில் தாம் ஏற்கனேவே அறிந்திருந்ததாக குறிப்பிட்டாா்.

இந்தப்பதிலை கேள்வியாக மாற்றிய அனுரகுமார திசாநாயக்க, அப்படியானால், இந்த செயலணியின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தொடா்பில் பிரதமாின் இணக்கம் பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினாா்.

எனினும் அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உாிய பதில் வழங்கப்படவில்லை.

குறித்த செயலணியின் தலைவர், மற்றும் உறுப்பினா்கள் எந்த தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனா் என்ற அனுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கே பிரதமருக்கும் அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இந்த கருத்தாடல்கள் இடம்பெற்றன.

பிரதமாிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, பிரதமருக்கு பதிலாக அவையின் தலைவா் அமைச்சா் தினேஸ் குணவர்த்தன மற்றும் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சா் சரத் வீரசேகர ஆகியோரும் அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதில் வழங்கினா்.

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த செயலணியும் அதற்கான உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டதாக அவா்கள் குறிப்பிட்டனா்.

இதன்போது குறுக்கிட்ட அனுர குமார திசாநாயக்க, நீதியமைச்சருக்கு அடுத்ததாக பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் இந்த செயலணி தொடா்பான தெளிவுப்படுத்தப்படவில்லை என்பதை தெரிந்துக்கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டாா்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...