Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடக்கு,தெற்கு இணைந்து நடத்திய 'தேசிய எதிர்ப்பு தினம்' வெற்றிகரமாக நடைபெற்றது!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 6:03 AM

வடக்கு,தெற்கு இணைந்து நடத்திய 'தேசிய எதிர்ப்பு தினம்' வெற்றிகரமாக நடைபெற்றது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடளாவிய ரீதியில் வெற்றிகரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • நாடு முழுவதும் பெய்த கடும் மழைக்கு மத்தியிலும் நவம்பர் 09 செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக மாகாண செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • நவம்பர் 9 ஆம் திகதியை 'தேசிய எதிர்ப்பு தினம்' என்று அறிவித்து போராட்டங்கள் வெடித்தன, மேலும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேசிய வளங்களை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • ஆசிரியர் அதிபர்களுக்கான போராட்டத்திற்கு நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட முன்னணி தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாடளாவிய ரீதியில் வெற்றிகரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் பெய்த கடும் மழைக்கு மத்தியிலும் நவம்பர் 09 செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக மாகாண செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நவம்பர் 9 ஆம் திகதியை 'தேசிய எதிர்ப்பு தினம்' என்று அறிவித்து போராட்டங்கள் வெடித்தன, மேலும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேசிய வளங்களை அரசாங்கம் குத்தகைக்கு விடுவதற்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆசிரியர் அதிபர்களுக்கான போராட்டத்திற்கு நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட முன்னணி தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரி, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பிரதான போராட்டம் நடைபெற்றது.

தலைநகரில் நடந்த போராட்டத்திற்கு பல சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

தேசிய வளங்கள் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி பல அரச நிறுவனங்களுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாகாண செய்தியாளர்களின் கூற்றுப்படி, வர்த்தக வலய ஊழியர்களும் ஹோட்டல் தொழிலாளர் மையங்களும் நாடளாவிய ரீதியில் ஒரு நாள் தேசிய போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, விவசாயிகளுக்கு உரிய உரம் வழங்குவது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை களைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது ஆகியனவே இந்தப் போராட்டங்களின் முக்கிய நோக்கங்களாகும்.

நவம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் நவம்பர் 10 புதன்கிழமை காலை 7 மணி வரை தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கி சுகாதார ஊழியர்களும் தேசிய எதிர்ப்பு தினத்தை ஆதரித்தனர்.

ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டை உடனடியாகத் தீர்க்கக் கோரி, ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் இன்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எதிர்வரும் 12ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அதற்காக அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களையும் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...