Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மலாலா யூசுப்சாய் திருமணம் செய்துகொண்டார்!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 5:43 AM

மலாலா யூசுப்சாய் திருமணம் செய்துகொண்டார்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான்கள் 2012ல் தாக்குதல் நடத்தினர்.
  • தனது 16வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.
  • இது தொடர்பாக நேற்று (நவ.09) மலாலா யூசப்சை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.
  • எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம்.
எழுத்து அளவு:

பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான்கள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.  இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.

தனது 16வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார்.  இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இந்நிலையில் அசர் என்பவருடன் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமின் எளிமை முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று (நவ.09) மலாலா யூசப்சை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் , என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள், அசரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் மலாலா இங்கிலாந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

“ மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து இடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்க கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மலாலா யூசுப்சாய் திருமணம் செய்துகொண்டார்! | Tamil Leader | We Lead the Nation