Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வடக்கில் "சிங்கள பௌத்த பாரம்பரியத்தை" தேடி அரசாங்கம் காணிகளை அபகரிப்பதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

நவம்பர் 10, 2021 • 4:25 AM

வடக்கில் "சிங்கள பௌத்த பாரம்பரியத்தை" தேடி அரசாங்கம் காணிகளை அபகரிப்பதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
  • யாழ்ப்பாணத்தில் அமைச்சர் விக்கிரமநாயக்கவின், காணிகளை கைப்பற்றும் செயற்பாடுகளுக்கு, ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆதரவளிப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • அரசாங்கத்தின் முயற்சிகள் சிங்கள எதிர்ப்பை அடக்கும் முயற்சியாக மாகாண அரசியல்வாதிகளால் இந்த விடயம் கண்டிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  விதுர விக்ரமநாயக்க,  தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

அரசாங்கத்தின் முயற்சிகள் சிங்கள எதிர்ப்பை அடக்கும் முயற்சியாக மாகாண அரசியல்வாதிகளால் இந்த விடயம் கண்டிக்கப்பட்டது.

”கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து மக்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களை தவறாக வழிநடத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த தொன்மை வாய்ந்த காணிகள் காணப்படுவதாக தெரிவித்து அதனை அபகரிக்க முயற்சிகள்  முன்னெடுக்கப்படுகின்றன.” என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

வேரப்பிட்டி கிராமத்தில் உள்ள கணேசா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பகுதியில் பல இடிபாடுகள் காணப்படுப்படுவதாகவும், பாடசாலைக் கட்டிடத்தின் வலதுபுறம் தரையில் சுமார் 15 மீட்டர் விட்டத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்ட இடத்தில் ஆறு அஸ்திவாரங்கள் சிதறிக் கிடப்பதாகவும், கட்டிடத்தின் கிழக்கே மைதானம் முழுவதும் பழைய ஓடுகள் மற்றும் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளிட்ட பல பொருட்கள் காணப்படுவதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

fgdfgrrrr

குறித்த இடத்தின் அகழ்வாராய்ச்சியை துரிதப்படுத்தி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை கண்டறியும் வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தொல்பொருள் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் தொல்லியல் துறை, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் விக்கிரமநாயக்கவின், காணிகளை கைப்பற்றும் செயற்பாடுகளுக்கு, ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆதரவளிப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் இடங்களை கைப்பற்றுவதில் ஒன்றுதான் தொல்லியல் துறையும். அமைச்சர் மற்ற அனைத்து பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட்டு சிங்கள பௌத்த கலைப்பொருட்களை தேடி வடக்கிற்கு வருகிறார்.

இவற்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் ஆதரவளிப்பது வெட்கக்கேடானது. அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூட சிங்கள பௌத்த ஆதிக்கத்தைப் பரப்புவதற்கு ஆதரவளிக்கவில்லை. அங்கஜன் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும்.”  என அவர் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு குருந்தூர்மலை சிவன் ஆலயம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்களால் வழிபடப்பட்டு வரும் நிலையில், புத்தர் சிலையை வைத்து அதனை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கில் "சிங்கள பௌத்த பாரம்பரியத்தை" தேடி அரசாங்கம் காணிகளை அபகரிப்பதாக குற்றச்சாட்டு! | Tamil Leader | We Lead the Nation