Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உரத்தடைக்கு எதிராக மட்டக்களப்பில் உழவு இயந்திரங்களில் ஆர்ப்பாட்டம்!

T

The Leader Desk

நவம்பர் 9, 2021 • 4:06 AM

உரத்தடைக்கு எதிராக மட்டக்களப்பில் உழவு இயந்திரங்களில் ஆர்ப்பாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பில் திங்கட்கிழமை (நவம்பர் 08) விவசாயிகள் பலர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உழவு இயந்திரங்களில் வந்த விவசாயிகள், தமது பயிர்களுக்கு இரசாயன உரங்களை விரைவில் வழங்குமாறு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
  • ​பெரும் போகத்தில் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ராஜபக்ச அரசாங்கம் விதித்துள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தற்போது நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
  • உரப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பில் திங்கட்கிழமை (நவம்பர் 08) விவசாயிகள் பலர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு உழவு இயந்திரங்களில் வந்த விவசாயிகள், தமது பயிர்களுக்கு இரசாயன உரங்களை விரைவில் வழங்குமாறு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உரப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட செயலாளரிடம் கையளித்ததாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

​பெரும் போகத்தில் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ராஜபக்ச அரசாங்கம் விதித்துள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தற்போது நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவத்தினரால் இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு கூற வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு என்னால் முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்பு தெரிவித்திரு்ந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருப்பதை தாவர தனிமைப்படுத்தல் சேவை உறுதிப்படுத்தியதை அடுத்து அரசாங்கம் சர்வதேச நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Protest 1Protest 2Protest 3

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...