Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பௌத்த சின்னங்களை வைத்துக்கொண்டு அது சிங்கள மக்களுக்குரியதென்று கூறமுடியாது!

T

The Leader Desk

நவம்பர் 8, 2021 • 3:55 PM

பௌத்த சின்னங்களை வைத்துக்கொண்டு அது சிங்கள மக்களுக்குரியதென்று கூறமுடியாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பௌத்த விகாரையின் சிதைவுகளே வெடுக்குநாறி மலையில் உள்ளது எனத் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க அண்மையில் வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
  • பௌத்த சிங்கள மக்கள் வாழாத இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அந்த இடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழரோடு தொடர்புப்படுத்தித் தான் அதனைப் பார்க்க வேண்டும்.
  • அடுத்துவரும் 7 நாட்களில் கிரக நிலைகள்!
  • கோடீஸ்வர யோகத்தை அடையவுள்ள இரு ராசியினர் - இன்றைய ராசிபலன் அடுத்துவரும் 7 நாட்களில் கிரக நிலைகள்!
எழுத்து அளவு:

பௌத்த விகாரையின் சிதைவுகளே வெடுக்குநாறி மலையில் உள்ளது எனத் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க அண்மையில் வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆதியிலே பௌத்தம் என்பது தமிழர்களுக்குமுரிய ஒரு பண்பாட்டுச் சின்னமாகத் தான் காணப்பட்டது. இந்து மதமும் விளங்கியது. ஆகவே இந்த வன்னி பிராந்தியத்தில் வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாகப் பார்ப்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம், அவ்வாறு பார்க்க முடியாது.

ஏனென்றால் இந்த பௌத்த மதம் இலங்கையில் மட்டுமல்லாமல் உலகிலே பல நாடுகளில் பல இனம் , பல மொழி பேசுகின்ற மக்களிடையே பரவியதுண்டு. ஆகவே வெடுக்குநாறி மலையில் ஆதியிலே இந்துமதம் இருந்து பின்னர் அதிலே கணிசமான மக்கள் பௌத்தர்களாக மாறி பலர் இந்துக்களாக வாழ்ந்த காலகட்டத்திலே வன்னி பிராந்தியத்தில் தமிழ் பௌத்தமும் இருந்திருக்கலாம் என்பதிலே எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் பௌத்த சின்னங்களை வைத்துக்கொண்டு அது சிங்கள மக்களுக்குரியதென்றும், அதனாலே அவ் இடங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் எனவும் கூறுவது பொருத்தமானது இல்லை என்பது தான் என்னுடைய கருத்தாகும். இது இலங்கையிலுள்ள பல அறிஞர்களதும் பொதுவான கருத்தாகும்.

பௌத்த சிங்கள மக்கள் வாழாத இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அந்த இடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழரோடு தொடர்புப்படுத்தித் தான் அதனைப் பார்க்க வேண்டும். பௌத்தம் சார்ந்த சின்னங்களை ஒரு வழிபாட்டுக்குரிய இடங்களாக மாற்றுவது பொருத்தமில்லை.

மாறாக முன்பொரு காலத்தில் வன்னியிலே பௌத்த மதமும் இருந்ததென்ற ஒரு அடையாளமாக அதனை பாதுகாக்கலாமே ஒழிய அதனை ஒரு வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றுவது இன நல்லுறவைப் பாதிக்கின்ற ஒரு செயலாகத் தான் இருக்குமென்பது என்னுடைய கருத்து என மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் 7 நாட்களில் கிரக நிலைகள்! கோடீஸ்வர யோகத்தை அடையவுள்ள இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்

அடுத்துவரும் 7 நாட்களில் கிரக நிலைகள்! கோடீஸ்வர யோகத்தை அடையவுள்ள இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்

இலங்கைக்கு சாபமாக மாறிவிட்டது! தப்பிக்க முடியாது: நடிகை வீனா ஜெயகொடி எச்சரிக்கை

இலங்கைக்கு சாபமாக மாறிவிட்டது! தப்பிக்க முடியாது: நடிகை வீனா ஜெயகொடி எச்சரிக்கை

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பௌத்த சின்னங்களை வைத்துக்கொண்டு அது சிங்கள மக்களுக்குரியதென்று கூறமுடியாது! | Tamil Leader | We Lead the Nation