Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்யவும் முடியும்! கோட்டாபய

T

The Leader Desk

நவம்பர் 8, 2021 • 12:17 PM

ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்யவும் முடியும்! கோட்டாபய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் கூறினார்.
  • நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.
  • இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
எழுத்து அளவு:

புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி செய்ய எண்ணவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​தனது மனைவியுடன் சாதாரண ஹோட்டலில் தங்கியதாகவும் மனைவியின் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்குவதற்கு தானே பணத்தை செலுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை முந்தைய ஜனாதிபதிகள் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்ததாக சிலர் தன்னிடம் கூறியதாக தெரிவித்த ஜனாதிபதி , தான் அப்படிச் செய்யவில்லை என்றும், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...