Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எங்களிடம் இருந்து தப்பித்தாலும் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது! வீனா ஜெயகொடி

T

The Leader Desk

நவம்பர் 8, 2021 • 11:44 AM

எங்களிடம் இருந்து தப்பித்தாலும் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது! வீனா ஜெயகொடி 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அருட் தந்தை சிறில் காமி இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது, அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் கத்தோலிக்க திருச் சபையின் அருட் தந்தையர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.
  • முழு உலகத்திற்கும் பதில் கூற நேரிடும்.
  • நடிகை வீனா ஜெயகொடியும் அங்கு வருகை தந்திருந்ததுடன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

அருட் தந்தை சிறில் காமி இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது, அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் கத்தோலிக்க திருச் சபையின் அருட் தந்தையர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தனர்.

நடிகை வீனா ஜெயகொடியும் அங்கு வருகை தந்திருந்ததுடன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  இதற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கங்கள். நாங்கள் அதனையே கோருகிறோம்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அது தொடர்பான விசாரணைகளை சரியான முறையில் நடத்துவதில்லை.

வாக்குறுதி வழங்கியது போல் ஏன் அதனை நிறைவேற்றுவதில்லை. ஏற்கனவே இந்த விடயம் சர்வதேசத்திற்கு சென்று விட்டது. முழு உலகத்திற்கும் பதில் கூற நேரிடும்.

இதில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. எங்களிடம் இருந்து தப்பித்தாலும் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாது. இறைவன் இதனை கைவிட மாட்டார்.

இதனால், நாங்கள் அச்சமின்றி இருக்கின்றோம். நடக்க போவது நடக்கும். இதன் பலனை நாம் அனைவரும் அனுபவிக்க நேரிடும்.

ஏற்கனவே இது நாட்டிற்கு சாபமாக மாறியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் வீனா ஜெயகொடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...