Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ராஜபக்ஷர்கள் விவசாயிகளை முற்றாக அழித்துள்ளனர்! ஹர்ஷ டி சில்வா

T

The Leader Desk

நவம்பர் 7, 2021 • 3:55 PM

ராஜபக்ஷர்கள் விவசாயிகளை முற்றாக அழித்துள்ளனர்! ஹர்ஷ டி சில்வா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வீதிகளை விரிவுபடுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் முன்னர் மக்களின் வாழ்க்கை வசதிகளை இந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
  • ,000 கிலோ மீற்றர் வீதிகளை காபெட் செய்யும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை திறந்து வைத்தமை தொடர்பில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
  • விவசாயிகள் வீழும்போது கிராமிய அபிவிருத்தி முற்று முழுதாக வீழ்ச்சியடையும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய ராஜபக்ஷ சகோதர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பாலானோர் இந்த பிரதேச மக்களே என்று தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வீதிகளை விரிவுபடுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் முன்னர் மக்களின் வாழ்க்கை வசதிகளை இந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

100,000 கிலோ மீற்றர் வீதிகளை காபெட் செய்யும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை திறந்து வைத்தமை தொடர்பில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

விவசாயிகளைப் பலப்படுத்துவோம், அபிவிருத்தி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், விவசாயிகளை முற்றாக அழித்துள்ளதாகவும்  குற்றம் சுமத்தினார்.

விவசாயிகள் வீழும்போது கிராமிய அபிவிருத்தி முற்று முழுதாக வீழ்ச்சியடையும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய ராஜபக்ஷ சகோதர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பெரும்பாலானோர் இந்த பிரதேச மக்களே என்று தெரிவித்தார்.

இது விவசாயிகள் மீதான கோபம் போலவே தனக்குத் தெரிவதாகவும் என்றும் தமக்கு வாக்களித்த அவர்களை ராஜபக்ஷ சகோதரர்கள் பழிவாங்குவதாகவும் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கே அதிகளவில்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு அடுத்த படியாக வீதி அபிவிருத்திக்கே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துக்கோ, கல்விக்கோ அவ்வளவாக நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இதுவா நீங்கள் கேட்ட மாற்றம் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...