Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது!

T

The Leader Desk

நவம்பர் 7, 2021 • 3:31 PM

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள செனரத் திஸாநாயக்க, அரசியல் ஈடுபடுவது எப்படியாக இருந்தாலும் யுத்தம் செய்தது இராணுவ தளபதியே அன்றி இராணுவ கேர்ணல் ஒருவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.
  • அவரால் 20 முதல் 25 பேர் கொண்ட இராணுவ உப குழுவை நிர்வகிக்க முடியுமே அன்றி, கிராம சேவகர் பிரிவை நிர்வகிக்க முடியாது.
  • அந்த முகநூல் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவு பற்றியது.
எழுத்து அளவு:

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள செனரத் திஸாநாயக்க, அரசியல் ஈடுபடுவது எப்படியாக இருந்தாலும் யுத்தம் செய்தது இராணுவ தளபதியே அன்றி இராணுவ கேர்ணல் ஒருவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

அந்த முகநூல் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவு பற்றியது. இந்த தெரிவு சமூகத்தில் பேசப்படும் பொருளாகியுள்ளது. இவர்களை தெரிவு செய்ய நாட்டின் ஜனாதிபதி புத்திஜீவியாகவோ படித்தவராகவோ இருக்க வேண்டும். கேர்ணல் ஒருவரிடம் தேவையற்றவைகளை எதிர்பார்க்க வேண்டாம்.

அவரால் 20 முதல் 25 பேர் கொண்ட இராணுவ உப குழுவை நிர்வகிக்க முடியுமே அன்றி, கிராம சேவகர் பிரிவை நிர்வகிக்க முடியாது.

அரசியல் எப்படி இருந்தாலும் யுத்தம் செய்தவர், இராணுவ தளபதியே அன்றி கேர்ணல் அல்ல.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் உதவியாளர் பதவியை வகித்த பிரதமரிடமும் இப்படியான ஒன்றை எதிர்பார்க்க முடியாது.

இவற்றை அவதூறு என தவறாக எண்ண வேண்டாம். இவர்கள் தலைமையில் நடந்த நூற்றுக்கணக்கான கூட்டங்கள் மற்றும் வைபவங்களில் கலந்துக்கொண்ட அதிகாரி மற்றும் நிறுவன தலைவர் என்ற வகையிலும் அவர்கள் எடுத்த தீர்மானங்கள் குறித்த அனுபவம் கொண்டவன் என்ற முறையிலும் நான் இவற்றை கூறுகிறேன் என செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை இராணுவத்தில் கேர்ணல் தர அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...