Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சீன உரக் கப்பலை இலங்கை ஏற்றுக்கொள்ளுமா?

T

The Leader Desk

நவம்பர் 6, 2021 • 2:52 PM

சீன உரக் கப்பலை இலங்கை ஏற்றுக்கொள்ளுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடலின் மேற்குப் பகுதி நோக்கி இன்று (06) முற்பகல் பயணித்திருந்தது.
  • கடந்த 24 ஆம் திகதி வேறு பெயரில் ஹம்பாந்தோட்டைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காணப்பட்ட இந்தக் கப்பலை, கடந்த 02ஆம் திகதி தனது உண்மையான பெயரில் மாத்தறை – வெலிகமவிலிருந்து 61 கடல் மைல் தொலைவில் காண முடிந்தது.
  • இதற்கிடையில், கப்பல் தொடர்பான தகவல் மீண்டும் நேற்றைய தினம் (05) பதிவாகியது.
  • நேற்று தெரிய வந்த தகவல்களுக்கு அமைய, இரவு 11 மணியின் பின்னர் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், மேலும் ஆழமான கடற்பரப்பு அல்லது சீனா நோக்கி பயணிப்பதாக தகவல் பதிவானது.
எழுத்து அளவு:

ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடலின் மேற்குப் பகுதி நோக்கி இன்று (06) முற்பகல் பயணித்திருந்தது.

கடந்த 24 ஆம் திகதி வேறு பெயரில் ஹம்பாந்தோட்டைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காணப்பட்ட இந்தக் கப்பலை, கடந்த 02ஆம் திகதி தனது உண்மையான பெயரில் மாத்தறை – வெலிகமவிலிருந்து 61 கடல் மைல் தொலைவில் காண முடிந்தது.

அங்கிருந்து மீண்டும் செய்மதியின் தொடர்பை துண்டித்து காணாமற்போன கப்பல், இலங்கை கடற்பரப்பில் எந்தப் பகுதியில் காணப்பட்டது என்ற உறுதியான தகவலை இலங்கையினால் அறிந்துகொள்ள முடியாமற்போனது.

இதற்கிடையில், கப்பல் தொடர்பான தகவல் மீண்டும் நேற்றைய தினம் (05) பதிவாகியது.

நேற்று தெரிய வந்த தகவல்களுக்கு அமைய, இரவு 11 மணியின் பின்னர் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், மேலும் ஆழமான கடற்பரப்பு அல்லது சீனா நோக்கி பயணிப்பதாக தகவல் பதிவானது.

மீண்டும் நள்ளிரவாகும் போது மீண்டும் கப்பல் கொழும்பு துறைமுகம் நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.

இன்று (06) அதிகாலை 05 மணியாகும்போது கப்பல், கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்தமையை கடல் பயண இணையத்தளம் மூலம் அறியமுடிந்தது.

கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றிப் பயணித்த இந்தக் கப்பலை கொழும்பு துறைமுகம் ஏற்றுக்கொள்ளுமா?

இது குறித்து ஹாபர் மாஸ்டரிடம் வினவியபோது, அந்த கப்பல் ஏதேனும் விநியோகத்தை பெறுவதற்கோ அல்லது கொழும்பு துறைமுகத்திற்கு வருவதாகவோ இதுவரை அறிவிக்கப்படவில்லை என கூறினார்.

இதனிடையே, கப்பல் துறைமுகத்திற்குள் நுழைவதைத் தடுக்குமாறு அனைத்துப் பிரிவினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹாபர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், குறித்த கப்பலிலுள்ள சேதனப் பசளையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித ஜயசிங்க குறிப்பிட்டார்.

இரு சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்ட அந்த சேதனப் பசளையில் பாதகமான பக்டீரியா அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் அதனை ஏற்றுக்கொள்வதை இலங்கை நிராகரித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...