Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இரண்டு ஜனாதிபதிகளினதும், ஆலோசகராக இருந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகரான ஆர். பாஸ்கரலிங்கத்தின் பெயரும் பண்டோரா ஆவணத்தில்!

T

The Leader Desk

நவம்பர் 5, 2021 • 5:41 PM

இரண்டு ஜனாதிபதிகளினதும், ஆலோசகராக இருந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகரான ஆர். பாஸ்கரலிங்கத்தின் பெயரும் பண்டோரா ஆவணத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கரைகடந்த நிறுவனங்களில் சொத்துக்களை இரகசியாக பதுக்கியிருந்த உலக ஜாம்பாவான்கள் மற்றும் செல்வந்தர்களின் சொத்துக்கள் தொடர்பில் இரகசிய பண்டோரா ஆவணங்கள் ஊடாக ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான டொலர்களை ஆர்.
  • என்றாலும் அந்நாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன 2018ல் இந்தக் குழுவை கலைத்துவிட்டார்.
  • பாஸ்கரலிங்கம் கடந்த 2012ல் பிரத்தானிய வர்ஜின் தீவுகளில் ஒரு அறக்கட்டளையை அமைத்திருப்பதாகவும், அதன் தாபனப்படுத்தப்பட்ட ஆவணங்களின்படி, அவரது தொழிலாக ‘ஓய்வு பெற்றவர்” என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பண்டோரா ஆவணம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
எழுத்து அளவு:

கரைகடந்த நிறுவனங்களில் சொத்துக்களை இரகசியாக பதுக்கியிருந்த உலக ஜாம்பாவான்கள் மற்றும் செல்வந்தர்களின் சொத்துக்கள் தொடர்பில் இரகசிய பண்டோரா ஆவணங்கள் ஊடாக ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான டொலர்களை ஆர். பாஸ்கரலிங்கம் பதுக்கி வைத்துள்ளதாக புதிய பண்டோரா ஆவணங்களில் அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆலோசகராக 1989லிருந்து 1993 வரையிலும், பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான டிங்கிரி பண்டா விஜேதுங்கவின் ஆலோசகராக 1993லிருந்து 1994 வரையிலும் செயற்பட்டிருப்பதுடன், திறைசேரியின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளதாக பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார முகாமைத்துவக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். என்றாலும் அந்நாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன 2018ல் இந்தக் குழுவை கலைத்துவிட்டார்.

பாஸ்கரலிங்கம் கடந்த 2012ல் பிரத்தானிய வர்ஜின் தீவுகளில் ஒரு அறக்கட்டளையை அமைத்திருப்பதாகவும், அதன் தாபனப்படுத்தப்பட்ட ஆவணங்களின்படி, அவரது தொழிலாக ‘ஓய்வு பெற்றவர்” என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பண்டோரா ஆவணம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவரும் அவரது குடும்பமும் அதன் பயனாளிகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு, பிரித்தானியாவில் வர்ஜின் நிறுவனமொன்றும்,; கொழும்பு கிழக்கு தனியார் தொழில் பாடசலையான Horizon College of Business and Technology ன் பங்குகளை கொண்ட சிங்கப்பூர் நிறுவனமொன்றும் உள்ளடங்குவதாகவும் பண்டோர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

சர்வதேச ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைவு (ICIJ) ‘விற்பதற்கான இரகசியத்தன்மை” என்ற தலைப்பில,; இந்த கரைகடந்த தொழில்கள் சம்பந்தமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்த கையோடு இந்த அறக்கட்டளையை பாஸ்கரலிங்கம் மூடிவிட்டாhக பண்டோரா ஆவணங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இரகசிய மின்னஞ்சல் செய்திகளின்படி எவ்வித திட்டமுமின்றி பாஸ்கரலிங்கம் இதை கைவிட்டுள்ளதுடன், பின்னர், அவரது மகனுக்காகவும், மருமகனுக்காகவும் புதிய அறக்கட்டளையொன்றை அமைத்துள்ளதாகவும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...