Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து டயானா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

T

The Leader Desk

நவம்பர் 5, 2021 • 5:33 PM

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து டயானா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியலமைப்புச் சட்டத்தின் 20 வது திருத்தம் நிறைவேற்றப்படும் தருணத்தில் அதற்கு சார்பாக வாக்களித்ததாக குற்றஞ்சாட்டி தனது கட்சி உறுப்புரி;மையை பறிக்க பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • தனது பா.உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதற்கு முன்னர் நியாயமான ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொள்ள பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டும் மனுதாரர், இதனால் தனது இயற்கை நீதி தர்மம் என்ற சட்டரீதியான அடிப்படை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இதன்படி, தனது கட்சி உறுப்புரிமையை பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி எடுத்திருக்கும் முடிவை சட்டத்தின் முன்பாக வலுவிழக்கச் செய்து தீர்ப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மனுவில் பிரதிவாதிகளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக, தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிஹால் ஜி புஞ்சிஹேவா மற்றும் தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக உட்பட 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 20 வது திருத்தம் நிறைவேற்றப்படும் தருணத்தில் அதற்கு சார்பாக வாக்களித்ததாக குற்றஞ்சாட்டி தனது கட்சி உறுப்புரி;மையை பறிக்க பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனது பா.உறுப்பினர் பதவி பறிக்கப்படுவதற்கு முன்னர் நியாயமான ஒழுக்காற்று விசாரணையொன்றை மேற்கொள்ள பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டும் மனுதாரர், இதனால் தனது இயற்கை நீதி தர்மம் என்ற சட்டரீதியான அடிப்படை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனது கட்சி உறுப்புரிமையை பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி எடுத்திருக்கும் முடிவை சட்டத்தின் முன்பாக வலுவிழக்கச் செய்து தீர்ப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...