Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தென்னிலங்கை பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!

T

The Leader Desk

நவம்பர் 5, 2021 • 5:19 PM

ஆண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தென்னிலங்கை பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த அதிகாரி தமது வாடிக்கையாளரின் உயிரை மாய்த்துவிடுவாரோ என்ற அச்சத்தில் நாட்டின் உயர்மட்ட சட்ட நிறுவனம் ஒன்று குறித்த முறைப்பாட்டை செய்துள்ளது.
  • c) WP KX - 1486 என்ற எண்ணைக் கொண்ட வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் முன்னிலையில், சீருடை கலட்டிய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எங்கள் வாடிக்கையாளரைத் தாக்கியுள்ளார்.
  • d) எங்கள் வாடிக்கையாளரை வலுக்கட்டாயமாக முழந்தாலிடச் செய்து, அவரது கழுத்து, தலை, வயிறு மற்றும் பிறப்புறுப்பினை தாக்கியுள்ளதோடு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் எங்கள் வாடிக்கையாளர் சுயநினைவை இழக்கும் வரை காலால் மிதித்துள்ளார்.
  • மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் (ITJP) கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறிய 15 தமிழ் இளைஞர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.
எழுத்து அளவு:

அந்த அதிகாரி தமது வாடிக்கையாளரின் உயிரை மாய்த்துவிடுவாரோ என்ற அச்சத்தில் நாட்டின் உயர்மட்ட சட்ட நிறுவனம் ஒன்று குறித்த முறைப்பாட்டை செய்துள்ளது.

சப்ரகமுவ முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று, ஒருவரை பலவந்தமாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நிர்வாணமாக்கி, மயக்கம் வரும்வரை தாக்கி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு (கற்பழிப்பு) உட்டுபடுத்துவதாக அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கிரியெல்ல வீதியில் வாகனத்தில் பயணித்த ஒருவரை அதிகாரி தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனம் ஜனாதிபதியிடம் செய்த ஏழு பக்க முறைப்பாட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மிஷார ரணசிங்க என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதியில் சென்றவரை பொலிஸ் நிலையத்திற்கு பலவந்தமாக அழைத்துச் சென்ற செயற்பாட்டில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உதவியாக செயற்பட்ட, கிரியெல்ல பொலிஸ் நிலையத்தின் (15706) ஆர்.ஏ.ஜே பண்டார உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த சித்திரவதைக்கு உடந்தையாக இருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில், மிஷார ரணசிங்க உத்தியோகபூர்வ பொலிஸ் காவலில் வைக்கப்படாமல், பொறுப்பதிகாரியின் அறைக்கு அருகில் உள்ள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, இருளில் வைக்கப்பட்டுள்ளார். 

”இதன்போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் இருந்ததை குறிப்பிடுமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சித்திரவதை, பயம் மற்றும் வெறுப்பு ஆகிய விடயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.

a) எங்கள் வாடிக்கையாளரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.

b) எங்கள் வாடிக்கையாளர் நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிட வைக்கப்பட்டார்.

c) WP KX - 1486 என்ற எண்ணைக் கொண்ட  வாகனத்தில் இருந்த இரண்டு அதிகாரிகள் முன்னிலையில், சீருடை கலட்டிய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எங்கள் வாடிக்கையாளரைத் தாக்கியுள்ளார்.

d) எங்கள் வாடிக்கையாளரை வலுக்கட்டாயமாக முழந்தாலிடச் செய்து, அவரது கழுத்து, தலை, வயிறு மற்றும் பிறப்புறுப்பினை தாக்கியுள்ளதோடு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் எங்கள் வாடிக்கையாளர் சுயநினைவை இழக்கும் வரை காலால் மிதித்துள்ளார்.

e) எமது வாடிக்கையாளர் நிர்வாணமாக இருக்கும் போது, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,   தன்னுடைய கைத்தொலைபேசியில் அவரை புகைப்படமெடுத்துள்ளதோடு, அவரது பிறப்புறுப்புகளை இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

f) மதுபானம் மணம் வீசிய நிலையில் இருந்த,  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எங்கள் வாடிக்கையாளரின் உடலை அழுத்திக் கொண்டு, "உன் பி* புறத்தை திறக்கிறேன்" என அச்சுறுத்தியதோடு, பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார். விடுத்துள்ளார்.

g) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறு, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளதோடு, அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் எமது வாடிக்கையாளரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

h) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தன்னிடம் இருக்கும் எங்கள் வாடிக்கையாளரின் நிர்வாண புகைப்படங்களை பகிரங்கமாக பகிர்ந்து மற்றும் விளம்பரப்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளரை அவமானப்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி தமது வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை வெளிவருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என வாடிக்கையாளரான மிஷார ரணசிங்க அஞ்சுவதாகவும் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனம்  தெரிவித்துள்ளது.

போருக்குப் பின்னர் இலங்கை பாதுகாப்புப் படையினராலும் பொலிஸாராலும் தமிழ் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் பல  வருடங்களாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை முன்னைய அனைத்து அரசாங்கங்களும் மறுத்துள்ளன.

மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டம் (ITJP) கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறிய 15 தமிழ் இளைஞர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கமோ அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவோ (HRCSL) பொறுப்பான அதிகாரிகளின் பெயர்கள் உட்பட கூறப்படும் பாலியல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய இதுவரை முன்வரவில்லை மற்றும்  நாட்டின் முக்கிய தமிழ் அல்லாத ஊடகங்கள் இதுத் தொடர்பில் அறிக்கையிட்டதையும் காணக்கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் மிஷார ரணசிங்க சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக தென்னிலங்கை பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு! | Tamil Leader | We Lead the Nation