Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொது நினைவேந்தலிற்கு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு!

T

The Leader Desk

நவம்பர் 5, 2021 • 6:38 AM

பொது நினைவேந்தலிற்கு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நவம்பர் மாத்தில் வருகின்ற மூன்றாம் சனிக்கிழமையை நினைவேந்தலிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் காரணமாக எமது மக்கள் அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்;டுள்ளனர்.
  • இந்நிலையில் நவம்பர் 20 திகதி சனிக்கிழமையை போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாக சிறப்பிப்போம்.
  • பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய ஆயர்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
எழுத்து அளவு:

நவம்பர் மாத்தில் வருகின்ற மூன்றாம் சனிக்கிழமையை நினைவேந்தலிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் காரணமாக எமது மக்கள் அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்;டுள்ளனர். தமது இன்னுயிரைப் பறிகொடுத்தோர், தங்களது உடன் பிறப்புக்களை, உறவுகளை இழந்தோர் ஒருபுறமுள்ளனர்.அதேபோல வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த வடுக்களால் அங்கவீனமுற்றோர், தொடர்ந்தும் எதுவிதமான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது சிறையில் வாடுவோர், உடமைகளையும், இல்லிடங்களையும், காணிகளையும் வாழ்வாதரங்களையும் இழந்தோர், உயிர் அச்சறுத்தல் காரணமாக அரசியல் தஞ்சம் தேடி புலம்பெயர்ந்தோர் என பலதரப்பட்ட மக்களை நாம் குறிப்பிடலாம்.

இறந்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் புரிகின்றமை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத்தில் வந்தாலும் இந்த முயற்சிக்குப் பல கோணங்களிலிருந்தும் பல தடைகள் இன்று வரையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் நவம்பர் 20 திகதி சனிக்கிழமையை போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாக சிறப்பிப்போம்.

அன்றைய தினம் போரில் ஈடுபட்ட தரப்பினர், போரினால் இறந்துபோன மதத்தவைர்கள் அரசியல்வாதிகள், அரச பணியாளர்கள். பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய ஆயர்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இதற்கெனக் குறிப்பிட்ட இடமும் இல்லை, நேரமும் இல்லை. அன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறைவேண்டல் புரியவும் அன்போடு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இவ்வழைப்பை வடக்கு-கிழக்கு கத்தோலிக்க ஆயர்களாக நாம் எம்மக்களுக்கு விடுத்தாலும் சமயங்களைக் கடந்து அனைத்து சமயத் தலைவர்களையும், தமிழ்கூறும் நல்லுலகையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். எமது இந்த முன்னெடுப்பு வெற்றியளிக்க அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்பதாகவும் ஆயர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொது நினைவேந்தலிற்கு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு! | Tamil Leader | We Lead the Nation