Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் திடீரென்று முளைத்த இராணுவ முகாம்!

T

The Leader Desk

நவம்பர் 4, 2021 • 4:07 PM

மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் திடீரென்று முளைத்த இராணுவ முகாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உட்பட மதஸ்தளங்களும் காணப்படுகின்றன.
  • இதேவேளை மாந்தீவு பிரதேசத்திற்குள் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு நின்ற இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதோடு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி எடுத்து வருமாறு கோரியுள்ளனர்.
  • அத்தோடு இலங்கையில் வரலாற்று ரீதியாக குறித்த பிரதேசம் பறவைகள் சரணாலயமாக உள்ளது.
எழுத்து அளவு:

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உட்பட மதஸ்தளங்களும் காணப்படுகின்றன.

அத்தோடு இலங்கையில் வரலாற்று ரீதியாக குறித்த பிரதேசம் பறவைகள் சரணாலயமாக உள்ளது.

இன் நிலையில் குறித்த பிரதேசத்தில் திடீரென இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாந்தீவு பிரதேசத்திற்குள் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கு நின்ற இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதோடு பாதுகாப்பு அமைச்சில் அனுமதி எடுத்து வருமாறு கோரியுள்ளனர்.

இதுவரை காலமும் சுகாதார அமைச்சுக்கு சொந்தமாக இருந்து வந்த மாந்தீவு பிரதேசம் எப்போது பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டது என்ற விடயம் யாருக்கும் தெரியாத நிலையில் அங்கு விமானப்படைக்கு சொந்தமான இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டபோது குறித்த பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று தற்காலிகமாக இயங்கி வருவதாகவும் நிரந்தர இராணுவ முகாம் ஒன்றுக்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான எந்த உத்தியோக பூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த பிரதேசத்தில் விமாப்படை முகாம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...