Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை! சரத் வீரசேகர

T

The Leader Desk

நவம்பர் 4, 2021 • 9:33 AM

தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை! சரத் வீரசேகர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத குற்றச்செயல்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
  • அதேபோன்று பொலிஸ் திணைக்களத்தில் கடமையிலிருக்கும் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
  • இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், போதைப்பொருள் வர்த்தகம், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
எழுத்து அளவு:

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத குற்றச்செயல்களுடன் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், போதைப்பொருள் வர்த்தகம், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு தவறான நடத்தைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸ் அதிகாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதுடன் அவர்களுக்கெதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

அதேபோன்று பொலிஸ் திணைக்களத்தில் கடமையிலிருக்கும் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடு, போதைப்பொருள் கடத்தல், வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கின்றது. அதனால் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...