Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரிசி,சீனி கொள்வனவு செய்ய வேண்டுமாயின் வேறு ஐந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்! பந்துல

T

The Leader Desk

நவம்பர் 4, 2021 • 8:59 AM

அரிசி,சீனி கொள்வனவு செய்ய வேண்டுமாயின் வேறு ஐந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்! பந்துல

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி இன்றைய தினம் முதல் சதொச நிறுவனத்தில் அரிசி மற்றும் சீனி என்பனவற்றை மட்டும் கொள்வனவு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சந்தையில் கேள்வி நிலவும் வரையில் அரிசி தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • ஒரு கிலோகிராம் நாடு அரிசி 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும், ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அதன்படி இன்றைய தினம் முதல் சதொச நிறுவனத்தில் அரிசி மற்றும் சீனி என்பனவற்றை மட்டும் கொள்வனவு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி அல்லது சீனி கொள்வனவு செய்ய வேண்டுமாயின் குறைந்தபட்சம் வேறு ஐந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனை தெரிவித்துள்ளார்.

வறிய குடும்பம் என்றாலும் அரிசி மற்றும் சீனி மட்டும் கொள்வனவு செய்ய மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுளார்.

மஞ்சள், சீனி மற்றும் அரிசி போன்ற பொருட்களை குறைந்த விலையில் சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்து வெளியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதனால் இவ்வாறு நிபந்தனை அடிப்படையில் பொருள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் கேள்வி நிலவும் வரையில் அரிசி தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி விலை கட்டுப்பாடு தோல்வியடைந்த காரணத்தினால் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் நாடு அரிசி 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும், ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மற்றும் சிவப்பு சீனியும் இவ்வாறு வரையறைகளுடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

என்ற போதும் நாட்டில் தற்போது பொருட்களின் விலையேற்றத்தால் கடும் திண்டாட்டத்தில் உள்ள மக்களுக்கு இந்த அறிவிப்பானது பேரிடியாக இருக்கும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...