Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சாரதியைதாக்கி நிர்வாணமாக்கி மண்டியிட வைத்த பொலிஸ் அதிகாரி!

T

The Leader Desk

நவம்பர் 3, 2021 • 5:24 AM

சாரதியைதாக்கி நிர்வாணமாக்கி மண்டியிட வைத்த பொலிஸ் அதிகாரி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அண்மையில் வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது.
  • சாரதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் கோருவதாக ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளனர்.
  • இதனையடுத்து குறித்த அதிகாரி இடம்மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

அண்மையில் வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது.

இதனையடுத்து குறித்த அதிகாரி இடம்மாற்றம் செய்யப்பட்டிருந்தார். வீதியிலும், பொலிஸ் நிலையத்திலும் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சித் தகவல்களை பிரபல சட்ட நிறுவனமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

சாரதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமது கட்சிக்காரர் கோருவதாக ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு சாரதியை வீதியில் தாக்கியமை, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி காட்சிகளில் வெளியாகியதையடுத்து, இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் , கிரியெல்ல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது கட்சிக்காரர், ஒரு அறைக்குள், நிர்வாணமாக்கப்பட்டு மண்டியிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதுடன் இரு அதிகாரிகள் முன்னிலையில் சாரதியை சிரேஷ்ட டிஐஜி தாக்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமது கட்சிக்காரர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆடையின்றி குறித்த சாரதியை புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...