Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சோற்றுக்கு பதிலாக மரவள்ளிக் கிழங்கு உண்ணுங்கள்! சமல் ராஜபக்ஷ

T

The Leader Desk

நவம்பர் 2, 2021 • 3:26 PM

சோற்றுக்கு பதிலாக மரவள்ளிக் கிழங்கு உண்ணுங்கள்! சமல் ராஜபக்ஷ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண் டார்கள் என்றும் அவர் கூறினார்.
  • எனினும் இயற்கை விவசாயத்தை யாரும் விரும்புவதில்லை என்பது தெளிவாகிறது.
  • அதோடு உள்ளூரில் 60க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன.
எழுத்து அளவு:

கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண் டார்கள் என்றும் அவர் கூறினார்.

அதோடு பாண் சாப்பிடுவதற்குப் பதிலாக, மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது புற்று நோய்க்கும் சிறந்தது என்றும் பச்சைப்பயறு மோசமானதல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ தலதா மாளிகை இடம்பெற்ற பூஜையின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நானும் ஒரு விவசாயி தான். இயற்கை உரத்தில் பயிரிட்டுள்ளேன். புதியவர்கள் இதைத் தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக அமையும் என்றும் முதல் பருவத்தில் ஓர் அனுபவமாக இருக்கும் என்றும் அறுவடை குறைவாக இருந்தால், கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு பயப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இயற்கை விவசாயத்தை யாரும் விரும்புவதில்லை என்பது தெளிவாகிறது. மக்களுக்குத் தரமான நச்சுத்தன்மையற்ற உணவை வழங்க வேண்டும்.

கடந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கூடாது என்று கூக்குரல் எழுப்பப்பட்டது. இப்போது இரசாயன உரம் பெற வேண்டும் என்கிறார்கள்.இதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நம் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு நன்றாக விளைகிறது.

அதோடு உள்ளூரில் 60க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன. பச்சை பயறு , கௌபி போன்ற பயிர்கள் பல உள்ளன. இவற்றைச் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...