Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உயிரிழப்பு!

T

The Leader Desk

நவம்பர் 1, 2021 • 5:40 PM

முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் வீதியில் இன்று அதிகாலை வைற்றிலா அருகே கார் ஒன்று பைக் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டுள்ளது.
  • இதன்போது காரிலிருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற, ஆன்சி கபீர், (Ansi Kabeer) (25 வயது), அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டம் வென்ற அஞ்சனா ஷாஜன் (Anjana Shajan) ( 26 வயது) ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
  • அவருக்கு மொடலிங்கில் முன் அனுபவம் இல்லை.
  • அவர்களுடன் காரில் பயணம் செய்த, அவர்களது நண்பர்களான , முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் வீதியில் இன்று அதிகாலை வைற்றிலா அருகே கார் ஒன்று பைக் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டுள்ளது.

இதன்போது காரிலிருந்த 2019ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற, ஆன்சி கபீர், (Ansi Kabeer) (25 வயது), அழகி போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டம் வென்ற அஞ்சனா ஷாஜன் (Anjana Shajan) ( 26 வயது) ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆன்சி கபீர் திருவனந்தபுரம் மாவட்டம், ஆட்டிங்கள் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அஞ்சனா ஷாஜன் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவராவார். அத்துடன் அஞ்சனா ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார். அவருக்கு மொடலிங்கில் முன் அனுபவம் இல்லை. எனினும் மிஸ் கேரளா முதல் ரன்னர்-அப் பட்டத்தை அவர் வென்றார்.

அவர்களுடன் காரில் பயணம் செய்த, அவர்களது நண்பர்களான , முகமது ஆசிக் (30), அப்துல் ரஹ்மான் (28 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

accidentThe car that met with the accident

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...