Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கோத்தபாயவின் புதிய உத்தரவுகள் மூலம் ஊழியர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2021 • 5:08 PM

கோத்தபாயவின்  புதிய உத்தரவுகள் மூலம் ஊழியர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்தியாவசிய சேவைகள் கட்டளைகளின் கீழ் நிறுவப்ட்டுள்ள மக்கள் சேவையாற்றும் நிறுவனங்கள் எப்போதும் மக்கள் சேவைக்காக தியாகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டவையாகும்.
  • துறைமுகம், எரிபொருள், தபால், புகையிரத திணைக்களம், போக்குவரத்துச் சபை சேவைகள், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மற்றும் இலங்கை மத்திய வங்கி உட்பட அரச வங்கிகள் ஆகிய நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து விசேட வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
  • ஜனாதிபதியின் தேவைக்கேற்ப, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஒக்டோபர் 29ம் திகதி இந்த விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அத்தியாவசிய சேவைகள் கட்டளைகளின் கீழ் நிறுவப்ட்டுள்ள மக்கள் சேவையாற்றும் நிறுவனங்கள் எப்போதும் மக்கள் சேவைக்காக தியாகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டவையாகும். ஏற்கனவே பெருந்தொற்றினால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவிற்குப் போதுமான சம்பள அதிகரிப்பு உட்பட கொடுப்பனவுகளையும் கேட்கும் காலம் வந்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கூட்டாக பேரம் பேசுதல் உட்பட தொழில் நடவடிக்கைகள் ஊடாக வரவு-செலவு திட்டத்திலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்குத் தயாராகின்றனர். அரசாங்கத்தின் புதிய உத்தரவுகள் மூலம் ஊழியர்களின் இந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம், எரிபொருள், தபால், புகையிரத திணைக்களம், போக்குவரத்துச் சபை சேவைகள், பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மற்றும் இலங்கை மத்திய வங்கி உட்பட அரச வங்கிகள் ஆகிய நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து விசேட வர்த்தமானியொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் தேவைக்கேற்ப, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர ஒக்டோபர் 29ம் திகதி இந்த விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியின் இரண்டு வருடகாலத்தில் இத்தகைய உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, பல்வேறு சேவைகளைச் சார்ந்த அலுவலர்களை பலவந்தமாக அடிபணிய வைத்தார்களேயன்றி, 2019 நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலின் போதும் 2020 ஒகஸ் 5ம் திகதி பொதுத் தேர்தலின்போதும் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லையென தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நாட்டு மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான குறித்த சேவைகளை தடையின்றி நடாத்திச் செல்லும் நோக்கத்திலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதாக அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படையாகத் தெரிவதுடன், பெருந்தொற்று காலத்தில் கூட ஓய்வில்லாமல் சேவை செய்து மக்களுக்காக கடமைகளை செய்த பிரதான பொருளாதார மற்றும் மக்கள் சேவைகளுக்கு பலவந்தமாக உத்தரவிட்டு அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சி செய்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...