Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மக்களுக்கு சொந்தமான காணிகளில் வனபரிபாலனத் திணைக்களத்தினர் எல்லைக் கற்கள் போடுவதை ஏற்க முடியாது! வியாழேந்திரன்

T

The Leader Desk

அக்டோபர் 31, 2021 • 4:43 PM

மக்களுக்கு சொந்தமான காணிகளில் வனபரிபாலனத் திணைக்களத்தினர் எல்லைக் கற்கள் போடுவதை ஏற்க முடியாது! வியாழேந்திரன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு வரை உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் வனபரிபாலனத் திணைக்களத்தினர், எல்லைக் கற்களைப் போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  • இப்பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மை கண்டறிவதற்காக நேற்று(30) மாலை அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலும் நாங்கள் தலையிட்டு வனபரிபாலன திணைக்களத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து வந்திருக்கின்றோம்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு வரை உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளில் வனபரிபாலனத் திணைக்களத்தினர், எல்லைக் கற்களைப் போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மை கண்டறிவதற்காக நேற்று(30) மாலை அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலும் நாங்கள் தலையிட்டு வனபரிபாலன திணைக்களத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து வந்திருக்கின்றோம்.

தற்போதும் மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனபரிபாலன திணைக்களம், எல்லைக் கற்களைப் போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இவ்வேலைத்திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதுடன், மக்கள் வாழ்ந்த இடங்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். வனபரிபாலன திணைக்களத்தின் ஊடாக எல்லைக் கற்கள் இடப்படும் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளும் மற்றும் வாழ்வாதார காணிகளும் காணப்படுகின்றன.

மக்கள் இங்கு பல வருட காலமாக வாழ்ந்ததற்கான ஆவணங்கள் வைத்திருப்பதுடன், பல வருட காலமாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்ட ஆதாரங்களும் குடியிருப்புக்கள் காணப்பட்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன. ஒரு சிலரிடம் ஆவணங்கள் இல்லை என்பதே உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவற்றைக் கருத்தில் கொண்டு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனபரிபாலன திணைக்களம் போன்றன செயற்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் நாங்கள் வனபரிபாலன திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதார காணிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...