Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள்!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2021 • 3:59 PM

ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஃப்லிட் மொன் என்ற சர்வதேச கடற்பயணங்கள் தொடர்பிலான தரவுகள் அடங்கிய இணையத்தளம் நேற்று (30) பதிவேற்றிய தரவுகளில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், புதிய தரவுகளின் பிரகாரம் கடந்த 13 ஆம் திகதி மலாக்காவை அண்மித்த கடற்பிராந்தியத்திலிருந்து Hippo Spirit கப்பல், இலங்கை நோக்கி பயணத்தை முன்னெடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 44.82 கடல்மைல் தொலைவிலும் துறைமுகத்தில் இருந்து 66.9 பாகையிலும் கடந்த 24 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இன்று (31) மீண்டும் திருகோணமலை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக அதிகாரிகளிடம் கப்பல் தொடர்பில் நாம் வினவியபோது, குறித்த கப்பல் தமது ரேடார் கட்மைப்புக்குள் நுழைந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

ஃப்லிட் மொன் என்ற சர்வதேச கடற்பயணங்கள் தொடர்பிலான தரவுகள் அடங்கிய இணையத்தளம் நேற்று (30) பதிவேற்றிய தரவுகளில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆபத்தான நுண்ணுயிர்கள் அடங்கிய சேதனப் பசளை ஏற்றப்பட்ட Hippo Spirit கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக, நேற்று புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் ஊடாக Fleet Mon இணையத்தளம் தகவல் வௌியிட்டுள்ளது.

Hippo Spirit கப்பலின் அடையாள இலக்கதைக் கொண்ட Seio Explore எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கப்பல், எந்த துறைமுகத்திலிருந்து வருகை தந்துள்ளது என்பது தொடர்பில் அதில் குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும், புதிய தரவுகளின் பிரகாரம் கடந்த 13 ஆம் திகதி மலாக்காவை அண்மித்த கடற்பிராந்தியத்திலிருந்து Hippo Spirit கப்பல், இலங்கை நோக்கி பயணத்தை முன்னெடுத்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 44.82 கடல்மைல் தொலைவிலும் துறைமுகத்தில் இருந்து 66.9 பாகையிலும் கடந்த 24 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

Hippo Spirit கப்பல், யால தேசிய சரணாலயத்திற்கு அருகில் 4.18 கடல்மைல் அருகில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

எனினும், அதன் பின்னர் கப்பல் தொழில்நுட்ப ரீதியாக செய்மதி பதிவுகளிலிருந்து இந்த கப்பல் மீண்டும் காணாமற்போனது.

இன்று (31) மீண்டும் திருகோணமலை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக அதிகாரிகளிடம் கப்பல் தொடர்பில் நாம் வினவியபோது, குறித்த கப்பல் தமது ரேடார் கட்மைப்புக்குள் நுழைந்ததாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...