Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சித்திரவதையில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2021 • 8:37 AM

சித்திரவதையில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூவர், சித்திரவதை செய்ததாகக் காவலில் உள்ள சேவ் தி பேர்ல்ஸ் அமைப்பின் மொஹமட் சுல்தான் கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
  • பதினெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதரஸாவில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக மொஹமட் சுல்தான் கைது செய்யப்பட்டார்.
  • சந்தேகநபர், தன்னை சித்திரவதை செய்த மூன்று பேரின் பெயர்களை கோட்டை நீதவான் பிரியந்த பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்குவதற்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூவர், சித்திரவதை செய்ததாகக் காவலில் உள்ள சேவ் தி பேர்ல்ஸ் அமைப்பின் மொஹமட் சுல்தான் கோட்டை நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர், தன்னை சித்திரவதை செய்த மூன்று பேரின் பெயர்களை கோட்டை நீதவான் பிரியந்த பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.

பதினெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதரஸாவில் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமைக்காக மொஹமட் சுல்தான் கைது செய்யப்பட்டார்.

சித்திரவதை காரணமாக தனக்கு இன்னும் முதுகுத்தண்டு குறைபாடு இருப்பதாக அவர் கூறியதையடுத்து, அவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்பத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சட்டத்தரணி ஹிஸ்புல்லாவை குற்றவாளியாக்கும் நோக்கில், சித்திரவதை செய்யப்பட்டதாக, அல் சுஹாரியா அரபுக் கல்லூரியின் இரண்டு ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

மொஹமட் சுல்தானை பிணையில் விடுவிப்பதற்கு, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் மறுப்பு வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 10ஆம் திகதி வரை மொஹமட் சுல்தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினத்தில், வைத்திய மற்றும் பொலிஸ் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ஏப்ரல் 2020 இல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதோடு, மேலும் அவர் மத்ரஸா பாடாலையில் விரிவுரை நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சித்திரவதையில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது! | Tamil Leader | We Lead the Nation