Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இளம் வாக்காளர்களை தேர்தலில் ஈடுபடுத்த திட்டம்!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2021 • 8:25 AM

இளம் வாக்காளர்களை தேர்தலில் ஈடுபடுத்த திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இளைஞர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததுடன் அதற்கேற்ப இளைஞர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் பல்வேறு இளைஞர் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தி 2021 பெப்ரவரி மாதம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இது தொடர்பில் இந்நாட்டு இளைஞர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், மேலும் இளைஞர் ஒருவர் 18 வயதில் வாக்களராக பதிவு செய்துகொள்ள, அவரது கிராமத்தைச் சேர்ந்த கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
  • வாக்காளர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி முதலாம் திகதிக்கு மாற்றப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.
எழுத்து அளவு:

இளைஞர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்ததுடன் அதற்கேற்ப இளைஞர்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

1980ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க வாக்காளர் பதிவுச் சட்டத்திற்கு அமைய, முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் திகதியில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டதோடு, அதன் பின்னர் பிறந்த தினத்தை கொண்டவர்களுக்கு அதற்கு அடுத்த வருடம் மே 31ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறும் தேர்தலிலேயே வாக்குரிமை கிடைத்தது.

இது தொடர்பில் பல்வேறு இளைஞர் அமைப்புக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தி 2021 பெப்ரவரி மாதம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்தச் சட்டமூலம், இந்தச் சூழலைக் கடந்து, அதிக இளைஞர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பளிக்கும் வகையில், இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதேபாடு, 2021 22ஆம் இலக்க வாக்காளர் பதிவு (திருத்தம்) சட்டம் ஒக்டோபர் 13 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்நாட்டு இளைஞர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், மேலும் இளைஞர் ஒருவர் 18 வயதில் வாக்களராக பதிவு செய்துகொள்ள, அவரது கிராமத்தைச் சேர்ந்த கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலைத் தவிர, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை துணைப் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும், இளைஞர்களின் பெயர்களை முதலில் அதில் சேர்க்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி முதலாம் திகதிக்கு மாற்றப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இளம் வாக்காளர்களை தேர்தலில் ஈடுபடுத்த திட்டம்! | Tamil Leader | We Lead the Nation