Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2021 • 7:46 AM

கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண் நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதில், கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் (Anita Anand) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்நிலையில், கனடா பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்கும் தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் அவர்களுக்கு, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாமகவின் நிறுவனுருமான மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை கடந்த 1990ம் ஆண்டுக்கு பின் கனடா நாட்டின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் (Anita Anand) என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இதில், கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த்  (Anita Anand) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டின் - வேலூரை பூர்வீகமாகக் கொணடவர். அனிதா ஆனந்த்தின் தந்தை சுந்தரம் விவேகானந்தன் ஒரு மருத்துவர் ஆவார். அனிதாவின் தாயார் பெயர் சரோஜ் ராம், இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸைச் சேர்ந்தவர் .

இந்நிலையில், கனடா பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்கும் தமிழ்ப் பெண் அனிதா ஆனந்த் அவர்களுக்கு, தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாமகவின் நிறுவனுருமான மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 "கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழ்நாட்டு மரபுவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த்  (Anita Anand)  அமர்த்தப்பட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது பெண் இவர் என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு வாழ்த்துகள்" என மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 1990ம் ஆண்டுக்கு பின் கனடா நாட்டின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டாவது பெண்மணி அனிதா ஆனந்த் (Anita Anand)  என்பது குறிப்பிடத்தக்கது.    

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...