Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆயிரக்கணக்கானோரை மீள்குடியேற்றி வடக்கின் எல்லைகளை மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2021 • 7:02 AM

ஆயிரக்கணக்கானோரை மீள்குடியேற்றி வடக்கின் எல்லைகளை மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கின் மாகாண எல்லைகளை உடனடியாக மாற்றி சனத்தொகை முறையை செயற்கையாக மாற்றுதை நிறுத்துமாறுகோரி வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • போகஸ்வெவக்கு மேலதிகமாக, நாமல்கம 1, 2, சலலிஹினிகம மற்றும் நந்திமித்திரகம ஆகிய புதிய குடியிருப்புகளில் போருக்குப் பின்னரான குடியேற்றங்கள் ஏற்கனவே மாகாணத்திற்கு வெளியில் இருந்து இராணுவத்தினர் உட்பட சிங்கள குடும்பங்களை குடியேற்றியுள்ளன.
  • எனினும், அவ்வாறானதொரு கலந்துரையாடல் ஒருபோதும் இடம்பெறவில்லை” என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
  • அநுராதபுரம் மாவட்டத்தில் பதவிய மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வவுனியா நகருக்கு கிழக்கிலும் தெற்கிலும் சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ள புதிய கிராமம் அமைந்துள்ளது.
எழுத்து அளவு:

வடக்கின் மாகாண எல்லைகளை உடனடியாக மாற்றி சனத்தொகை முறையை செயற்கையாக மாற்றுதை நிறுத்துமாறுகோரி வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

17வது நிகழ்ச்சியான ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சிக்காக பெப்ரவரி 3ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் போகஸ்வெவ என அழைக்கப்படும் கொச்சியாங்குளம் கிராமத்திற்கு விஜயம் செய்த போது, ​​சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை வடமாகாணத்தின் வவுனியா மாவட்ட எல்லைக்கு மீள்குடியமர்த்துவதற்கான திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.

அன்றைய தினம், “கெபிதிகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 600 குடும்பங்களும், அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கம்பிலிவெவ, வெஹரதென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் தங்கவைக்கப்படவுள்ளனர். என வவுனியா அரசாங்க அதிபர் எம்.சமன் பந்துலசேன அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒக்டோபர் 22ஆம் திகதி முன்னணி அரசியல்வாதிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

போகஸ்வெவக்கு மேலதிகமாக, நாமல்கம 1, 2, சலலிஹினிகம மற்றும் நந்திமித்திரகம ஆகிய புதிய குடியிருப்புகளில் போருக்குப் பின்னரான குடியேற்றங்கள் ஏற்கனவே மாகாணத்திற்கு வெளியில் இருந்து இராணுவத்தினர் உட்பட சிங்கள குடும்பங்களை குடியேற்றியுள்ளன.

“மாகாண எல்லைகளை மாற்றும் இந்த முயற்சியின் அடிப்படை நோக்கம் மக்கள்தொகையை மாற்றி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனப்படுத்துவதாகும். மாகாண எல்லைகளை மாற்றுவது, நாட்டின் மூலோபாய முடிவு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து செய்யப்பட வேண்டும். எனினும், அவ்வாறானதொரு கலந்துரையாடல் ஒருபோதும் இடம்பெறவில்லை” என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

செல்வம் அடைக்கலநாதன், செல்வராஜா கஜேந்திரன், சுப்ரமணியம் நோஹாரதலிங்கம், சிவஞானம் ஸ்ரீதரன், ஷானக்யன் ராசமாணிக்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் தமிழ் தேசிய முன்னணியின் தவராசா கலையரசன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பதவிய மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வவுனியா நகருக்கு கிழக்கிலும் தெற்கிலும் சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ள புதிய கிராமம் அமைந்துள்ளது.

சேனை விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட 478 குடும்பங்களைச் சேர்ந்த 1200 பேர் தற்போது அதே பிரதேசத்தில் வசித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆயிரக்கணக்கானோரை மீள்குடியேற்றி வடக்கின் எல்லைகளை மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation