Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பண்டாரவளை காவல்நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு நண்பனை நியமிக்க கோரிக்கை!

T

The Leader Desk

அக்டோபர் 27, 2021 • 3:59 AM

பண்டாரவளை காவல்நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு நண்பனை நியமிக்க கோரிக்கை! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "பண்டாரவளை காவல் நிலையத்தில் வெற்றிடமாக உள்ள காவல்துறை தலைமையக பரிசோதகர் பதவிக்கு நியமனம் கோரல்" என்ற தலைப்பில் பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
  • அந்த அதிகாரி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • குறித்த பதவிக்கு ஹப்புத்தளை காவல்நிலைய பொறுப்பதிகாரியாக ஏற்கனவே கடமையாற்றும் சாகர ரொஹான் தயாரத்னவை நியமிப்பது பொருத்தமானது என தலைவர் நிதி அமைச்சரிடம் யோசனை தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

"பண்டாரவளை காவல் நிலையத்தில் வெற்றிடமாக உள்ள காவல்துறை தலைமையக பரிசோதகர் பதவிக்கு நியமனம் கோரல்" என்ற தலைப்பில் பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த பதவிக்கு ஹப்புத்தளை காவல்நிலைய பொறுப்பதிகாரியாக ஏற்கனவே கடமையாற்றும் சாகர ரொஹான் தயாரத்னவை நியமிப்பது பொருத்தமானது என தலைவர் நிதி அமைச்சரிடம் யோசனை தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த அதிகாரி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த மிகவும் திறமையான, அனுபவம் வாய்ந்த மற்றும் நேர்மையான அதிகாரி என்பதை நான் மேலும் கூற விரும்புகிறேன்."

கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் அடிப்படையில் பண்டாரவளை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த பதவி வெற்றிடமாக உள்ளது.

”பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் துரித நகரமயமாதலால் நாளுக்கு நாள் சமூகப் பேரழிவுகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் அந்த முரண்பாடுகளைத் தணித்து, மக்களுக்கு அமைதியான, சுதந்திரமான சூழலை மரபுரிமையை பெற்றுத் தருவதே ஒரே நோக்கமாகும்.” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பண்டாரவளை தொகுதியின் அமைப்பாளரான கரகஹவெல நந்தவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரியின் நியமனம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் கரகஹவெல நந்தவிமல தேரர் மேலும் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

"பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கும், உரிய அதிகாரியின் நியமனம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எனது கோரிக்கை தொடர்பில் உங்கள் கவனத்தைச் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்."

WhatsApp Image 2021 10 26 at 8.38.52 PM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பண்டாரவளை காவல்நிலைய பொறுப்பதிகாரி பதவிக்கு நண்பனை நியமிக்க கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation